ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு தகுந்த பாடம் புகட்டப்படவேண்டும் என, ராஜபக்ஷ அன் கோவினர் எண்ணியுள்ளனர் என்ற செய்திகள் கசிந்துள்ளது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு சில நாடுகள் வாக்களித்தபோதும், 8 நாடுகள் இதில் வாக்களிக்கவில்லை. அந்த நாடுகளைப் போல மெளனமாக இந்தியா இருந்திருக்கலாம் என ராஜபக்ஷ சகோதரர்கள் கருதுவதாகவும், இதற்கு தகுந்த பாடம் புகட்ட காஷ்மீர் பிரச்சனையை வெளியுலகிற்கு கொண்டுசெல்லவேண்டும் எனவும் அவர்கள் எண்ணியுள்ளனராம். குறிப்பாக காஷ்மீரில் இந்திய இராணுவம் புரிந்துள்ள சில அட்டூழியங்கள் வெளியுலகிற்குத் தெரிந்தாலும் அதனை மேற்குலக ஊடகங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கு ஒன்றில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதை குழிகள் பற்றியோ, இல்லை இந்திய இராணுவம் அங்குள்ள பூர்வீகக் குடிமக்களை கொலைசெய்தது பற்றியோ அதிகம் பேசப்படுவது இல்லை. இவ்வாறனதொரு சூழ் நிலையில் ஐ.நா மனித உரிமைச் சபையில் காஷ்மீர் பிரச்சனையை கொண்டுசெல்வதன் மூலம், இந்தியாவுக்கு தகுந்த பாடத்தை புகட்டமுடியும் என மகிந்தருக்கு சீனா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனராம். இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பாக ஒரு மந்திராலோசனையும் நடத்தப்பட்டிருக்கிறது.
இனிவருங்காலங்களில் இந்திய இலங்கை உறவுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக