நீண்டநாள் காத்திருந்து தனது மனங்கவர் காதலருடன் திருமண பந்தத்திலமுதல் தடவையாக இணையப்போகும் மகிழ்ச்சியுடன் திருமண அனுமதிப் பத்திரத்துக்காக விண்ணப்பித்த பெண்ணொ ருவர் தனக்கு ஏற்கனவே 3 தடவைகள் திருமணமாகியிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள மையை அறிந்து அதிர்ச் சியடைந்த சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.
நியூயோர்க் நகரைச் சேர்ந்த அனா வர்காஸ் (37 வயது) என்ற இந்தப்பெண்ணுக்கு ஏற்கனவே 3 தடவைகள் திருமணமாகியிருப்பதாக தெரிவித்து அவருக்கு திருமண அனுமதிப்பத்திரத்தை வழங்க அந்நகர திருமணப் பதிவு அலுவலகம் மறுப்புத் தெரிவித்திருந்தது. 1996 ஆம் ஆண்டில் அவர் ஈக்குவடோர் மற்றும் மெக்ஸிக்கோவை சேர்ந்த இரு ஆண்களைத் திருமணம் செய்துள்ளதாக திருமண பதிவு அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் தெரிவித்தன.
அதேசமயம் மூன்றாவது நபரொருவருடனும் அனாவுக்கு திருமணமாகி யுள்ளமை குறித்த பதிவுக ளும் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக திருமண பதிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளையடுத்து, தொலைந்து போன அனாவின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் போலி திருமணங் களை நடத்தியுள்ளமை கண்டறியப்பட்டது.
இறுதியில் அனாவுக்கு அவரது காதலரான ஏஞ்சல் பொகியை திருமணம் செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக