சவுதி அரேபியாவிற்கு பணிபுரியச் சென்று உயிரிழந்த தனது தாயின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர உதவி புரியுமாறு பலாங்கொடயைச் சேர்ந்த நபரொருவர் கண்ணீர் குரல் எழுப்பியுள்ளார்.
எச்.ஜீ.சீலவதி எனப்படும் தனது தாய் கடந்த வருடம் ஜூன் மாதம் 18ம் திகதி கொழும்பு வெல்லவீதியில் உள்ள முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக சவுதி அரேபியாவிற்கு சென்றதாக குறித்த தாயின் மகனான கிரிசாந்த பீரிஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.
இவர் பலாங்கொடை சதகல - கொட்டவெகரமங்கட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கடந்த வருடம் நபம்பர் மாதம் தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தனது தாய், பணிபுரியும் வீட்டில் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாகவும் தன்னை எப்படியாவது நாட்டுக்கு அழைத்துக் கொள்ளுமாறு கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.
அதன் பின் வேலை வாய்ப்பு முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் என்பவற்றில் பல தடவைகள் முறைப்பாடு செய்து உதவி கோரிய போதும், இதுவரை தனது தாயின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என கிரிசாந்த பீரிஸ் அத தெரணவிடம் குறிப்பிட்டார்.
ஒரு முறை முகவர் நிலையத்தில் வந்து முறையிட்டபோது உங்களது தாய் பணிபுரியும் இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் அதனால் அவரை கண்டுபிடிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனது தாய் மார்ச் மாதம் 2ம் திகதி உயிரிழந்ததாக மார்ச் 8ம் திகதி வீட்டு உரிமையாளர்கள் மூலம் தனக்கு தகவல் கிடைத்ததென கிரிசாந்த பீரிஸ் கூறினார்.
உயிருடன் இருந்த போது எனது தாயை நாட்டுக்கு அழைத்துவர தவறிய அதிகாரிகள் எல்லாம் முடிவடைந்து தாய் இறந்த பிறகு அவருக்கு இறுதி கௌரவம் செலுத்தவாவது அவரது உடலை நாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிசாந்த பீரிஸ் கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது தாயின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டுவரவென தான் இதுவரை ஐந்து தடவைகள் பலாங்கொடயில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்திற்கு வருகை தந்து சென்றுள்ளபோதும் தீர்வு எதுவும் இல்லை என அவர் கவலையுடன் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக