நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த பெற்றோருக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!
நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த முஸ்லீம் தம்பதிகளுக்கு சுவிஸில் 1400 சுவிஸ் பிறாங் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. சுவிஸ் பாசல் நகரில் வாழ்ந்து வரும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் பெற்றோர் தங்களது மகளை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக அளிக்கப்பட்ட நீந்தல் பயிற்சிக்கு அனுப்ப மறுத்ததால் 1400 சுவிஸ் பிறாங்க தண்டப்பணம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தங்கள் மகளை இஸ்லாமிய மத நூலான குரானின் கட்டளைப்படி வழிநடத்துவதால் நீந்தல் பயிற்சிக்கு அனுப்ப முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
ஆனால் நீதிமன்றமோ இந்த வாதத்தை நிராகரித்ததுடன் நீச்சல் பயிற்சியானது அவர்களின் மத நம்பிகையுடன் தொடர்புடைய விடயம் அல்ல என்றும் பொதுவாழ்வில் பாதுகாப்புடன் தொடர்புடையது என தெரிவித்து தண்டப் பணத்தையும் செலுத்த உத்தரவிட்டதுடன் மகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக