புதன், 28 மார்ச், 2012

வயதை குறைத்துக் காட்டும் சல்வார்!

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
  • பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
  • நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.
  • ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.



குண்டாக இருப்பவர்கள்:

  • ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.
  • எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.
  • முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.
  • ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.
  • அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.
  • சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.
  • மேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.
  • பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.
  • காட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே.
ஒல்லியாக இருப்பவர்களுக்கான உடை:

  • இப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.
  • பளீர் நிறமாகத் தேர்ந்தெடுங்கள்.
  • குட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.
  • ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.
  • லூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங்களுக்குப் பொருந்தும்.
  • காட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.
  • ஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.
  • ஜீன்ஸ், டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ் ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ் போடலாம்.
    Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல