பொறாமை காரணமாக தனது மனைவியின் மூக்கைக் கடித்துத் துண்டாக்கிய ஆசிரியரான கணவர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்கு புரொம்விச் பீனிக்ஸ் கொலேஜியேட் அக்கடமியில் கௌரவமிக்க விஞ்ஞான ஆசியராக பணியாற்றி வந்த நிகொலஸ் கோக் (59 வயது) என்பவரே தனது மனைவி லைன்னை (52 வயது) தமது வீட்டுத்தோட்டதரையில் தள்ளி அவரது மூக்கை கடித்துக் குதறியுள்ளார்.
சம்பவத்திற்கு முன் நிகொலஸ் கோக் ஒரு போத்தல் வைனை அருந்தியிருந்ததாக தெரி விக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் அவர் தனது மனைவியின் மூக்கை தமது செல்லப் பிராணியான நாயே கடித்துக் குதறியதாக பொய் கூறியுள்ளார். எனினும் விசாரணைகளைய டுத்து நிகொலஸ் கோக் குற் றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
திருமணம் செய்து 24 வருடங்களாக இணைந்து வாழ்ந்த இந் தத் தம்பதியின் வாழ்வில் கடந்த வருடம் புயல் வீச ஆரம்பித்தது.
வேறொரு நபருடன் லைனுக்கு காதல் ஏற்பட்டு, கடந்த வருடம் ஜூன் மாதம் நிகொலஸ் கோக்கிடமிருந்து பிரிந்து சென்றார்.
ஆனால் அவரது புதிய கணவர் அடுத்த மாதமே மரணமடையவும் லைன் மீளவும் பழைய கணவடம் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தனது மனைவி இறந்த புதுக் கணவரின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடவும், நிகொலஸ் கோக் அளவு கடந்த சினம் அடைந்தார்.
அவர் அளவுக்கதிகமான வைனை அருந்திய பின் மனைவியை தாக்கி அவரது மூக்கை கடித்துக்குதறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த வூல்வாஹம் டன் கிறவுண் நீதிமன்ற நீதிபதி மார்ட்டின் வால்ஷ், நிகொலஸ் கோக்கிற்கு 5 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக