18 வயது உக்ரேனிய யுவதியொருவர் குழுவொன்றால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு சாக்கடை குழிக்குள் போடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் அரசாங்க அதிகாரிகள் இருவரின் மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராந்திய அரசாங்க நிர்வாகி ஒருவன் மகனான மக்ஸிம் பிரிசிலியனியுக்கும் (23 வயது) பிராந்திய சட்ட அதிகாரியின் மகனான ஆர்டெம் பொகொஸியனும் (21 வய து) ஒஸ்கனா மாகர் என்ற மேற்படி யுவதியை தமது நண்பரான எவ்ஜெனி கிரன்ஸ்னோசெக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி யுள்ளனர்.
அதன் பின் அவர்கள் ஒஸ்கனா மாகரை படுகொலை செய்யும் முகமாக அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாகக் கருதி அவரைப் போர்வையால் சுற்றி கட்டட நிர்மாண தளமொன்றிலுள்ள சாக்கடைக்குழியொன்றினுள் வீசியுள்ளனர்.
அதன் பின் அத்தளத்துக்கு அவர்கள் தீ வைத்துள்ளனர். உடலின் 50 சதவீதம் எந்து கருகிய நிலையில் குற்றுயிராக இருந்த ஒஸ்கனா மாகரின் முனகல் சத்தம் கேட்ட பிரதேச வாசிகள், அவரைச் சாக்கடைக் குழியிலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர்.
இதனையடுத்து ஒஸ்கனா மாகர் தீவிர சிகிச்சையையடுத்து காப்பாற்றப்பட்டுள்ளார். மிகவும் மோசமாக எரிந்து கருகிய நிலையில் காணப்பட்ட அவரின் ஒரு காலையும் கையையும் அகற்ற வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஒஸ்கனா மாகர் உக்ரேனிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ நான் உயிர்பிழைக்க மாட்டேன் என்றே நினைத்தேன். நான் கண்விழித்த போது எனது உடலில் எது வித உணர்வும் இல்லாத நிலையில் இருந்தேன். எனது பலத்தைத் திரட்டி உதவி கோரி கூச்ச லிட்டேன். அங்கு எவருமே வரவில்லை. நான் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். நான் இறந்து விட்டேனோ என்று கூட எனக்கு சந்தேகமாக இருந்தது. எனக்கு நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாமே பனிமூட்டம் போன்று தெளிவற்ற நிலையிலேயே ஞாபகத்தில் உள்ளன'' என்று கூறினார்.
இந்நிலையில் ஒஸ்கனா மாகருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உக்ரேனிய மனித உமைகள் குழுவான “பெமென்' அமைப்பைச் சேர்ந்த பெண்கள்.
தலைநகர் கியவில் மேலாடையின்றி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்ட மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக