கடைகளுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சென்ற 54 பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் அழகான பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட கடத்தல் குழுவொன்றைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்களை பிரேசில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்படி மூவரும் “புளொன்டெஸ்' என்றழைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களாவர்.
இந்த கடத்தல் குழுவானது நன்கு கல்விகற்ற நாகரிகமான தோற்றத்தைக் கொண்ட பெண்களால் உருவாக்கப்பட்டதாகும்.
கடைத்தொகுதிகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பெண்களை இலக்கு வைக்கும் இந்தக் குழுவினர் அப்பெண்களை கடத்திச்சென்று அவர்களது கடன் அட்டைகளை அபகரித்து விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.
மேற்படி குழு 2008 ஆம் ஆண்டிலிருந்து தமது கைவரிசையை காட்டிவருகிறது. இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்தக் குழுவைச் சேர்ந்த மூவரில் ஆண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
இந்தக் கடத்தல் குழுவின் தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் வாக்னர் கொன்கால்வ்ஸ் என்பவரும் அவரது மனைவி மொனிக் அவோகியும் பிரேசிலின் வட பிராந்தியத்துக்கு தப்பிச்செல்ல முயன்ற வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
வாக்னரும் மொனிக்கும் தமது வெளித்தோற்றத்தை பொலிஸார் அடையாளங் காணாதவாறு மாற்றியிருந்ததாகக் கூறப்படுகிறது. கடைத்தெருக்களுக்கு கார்களில் தனித்துச் செல்லும் பெண்களைப் பின்தொடர்ந்தே இந்த குழுவினர் தமது கைவரிசையை காண்பித்துவந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் மேற்படி கைதுசெய்யப்பட்ட குழுவைச் சேர்ந்த மூவரையும், அவர்களால் பாதிக்கப்பட்ட 21க்கு மேற்பட்ட பெண்கள் அடையாளங்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக