தனது 6 வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்த சிறுவன் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை “பேஸ்புக்' வலைத் தளத்தின் உதவியினால் சந்தித்த நெகிழ்ச்சிக்குரிய ம்பவம் ஒன்று மத்திய பிரதேசம் அருகே இடம்பெற்றுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர்.
தனது கணவர் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு சென்று விட்டதால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பாத்திமா தனது குழந்தைகளை வளர்த்தார். பின்னர் சிறிது காலத்திலேயே மூத்த மகன் குட்டு தன் குடும்பத்தின் பாரத்தை சுமக்க ஆரம்பித்தான். சகோதரர்கள் உதவியுடன் பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில், அவன் நடத்திய தேநீர் கடையே குடும்பத்தை காத்து வந்தது.
இந்நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டின் ஒரு நாளில் தனது தேநீர் கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரயிலில் தனது சகோதரன் ஷேருக்குடன் குட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில் ஷேருக் காணாமல் போய்விட்டான். இதனால் அந்த குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.
இதனிடையே ரயிலில் ஏறியதும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்ததால் தனது சகோதரனை பறிகொடுத்த ஷேருக், அதே ரயிலில் கொல்கத்தா சென்றடைந்தான். அங்கே ஒரு பிச்சைக்கார கும்பலிடம் சிக்கிக் கொண்ட அவன், ஒருவாரு அங்கிருந்து தப்பித்து ஒரு மீனவக் குடும்பமொன் றிடம் தஞ்சம் புகுந்தான். இந்நிலையில் அவனை அவுஸ்திரேலியா தம்பதியொன்று தங்கள் விருப்பத்தின் பேரில் தத்தெடுத்து அவர்கள் நாட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனது பெயரை ஷேருக் பிரேலி என்று மாற்றி தங்களுடன் வளர்த்து வந்தனர்.
ஆண்டுகளும் உருண்டோட அவுஸ்திரேலியாவில் படித்து பட்டம் பெற்ற ஷேருக் தனது தாய், சகோதரர்களை பார்க்க ஆர்வம் கொண்டார். இதனையடுத்து தன்னிடமிருந்த குடும்ப படத்தை “பேஸ்புக்' வலைதளத்தில் வெளியிட்டு தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். இதனைத்தொடர்ந்து தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிந்த ஷேருக், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக