தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே 2000 ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சொந்தமான ஏ.என்.-26 ரக விமானம் விழுந்து நொருங்கியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த விமானத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உட்பட 40 பேர் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விமானம் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலால் கீழே விழுந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
பலாலியிலிருந்து அநுராதபுரத்திற்கு புறப்பட்டு 10 நிமிடங்களில் இவ்விமானம் வில்பத்து காட்டில் வீழ்ந்தது. கிளிநொச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்ட இருவர் தாமே இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக் கொண்டதையடுத்து, இவ்விமான அனர்த்தம் குறித்த விசாரணையை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மீ்ண்டும் ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக