தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்கள பேரினவாதிகளுடன் ஒட்டி உறவாடி வருவதாலும், சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற்றுமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், மக்களால் தெரிவு செய்யப்படாத பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழீழ விடுதலைக்கும் போராடிய எமது போராளிகளையும் தலைவரையும் புலம்பெயர் மக்களையும் தொடாந்தும் அவதூறாக பேசிவருகிறார்.
சுமந்திரன் சிங்கள பேரினவாத அரசுக்கு சார்பாகவும் தமிழர்களுக்கு விரோதமாகவும் விதைத்த கருத்துக்களை இங்கே பட்டியல் இடுகின்றோம்.
1. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை
2 .புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை
3. இறுதி யுத்தத்தின் போது புலிகளும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்
4. சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்
5. இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை
6. சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும்
7. புலம்பெயர் மக்கள் போர்க்குற்ற விசாரனை என்ற ரீதியில் போராட்டங்கள் செய்யக்கூடாது. இலண்டனில் நடந்த கூட்டத்தில்
8. பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இனப்படுகொலைவாதி மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியது.
9. புலம்பெயர் மக்கள் எவ்வளவு போராட்டங்கள் செய்தாலும் அதனால் எதுவும் நடக்காது, வெளிநாட்டு அரசியல்வாதிகள் அப்போராட்டங்களை மதிப்பதில்லை எதை என்னிடம் அவர்களே கூறியதாக இலண்டனில் நடந்த கூட்டத்தில் கூறி புலம்பெயர் மக்களின் பேராட்டங்கள் அர்த்தமற்றது என போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.
10. வன்முறையை கைவிடுமாறு நான் புலிகளை கேட்டிருந்தேன். தேசியப் பிரச்சனைக்கு வன்முறை மூலம் தீர்வு சாத்தியமில்லை.
இவர் கூறிய கருத்துக்கள் அவ்வளவும் சிங்கள பேரிவாத அரசியல்வாதிகள் பரப்புரை செய்த கருத்துக்கள். இப்போது இவர் ஊடாக தமிழ் மொழியில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்களத்தடன் ஒட்டி உறவாடுவதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக