சீனாவில் 130 ஆண்டுகள் பழைமையான அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட ஆணின் சடலமொன்று கல்லறைகளிலுள்ள கலைப்பொருட்களை கொள்ளையிடுபவர்களால் தோண்டி எடுக்கப்பட்டு கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது.
பற்களும் தோலும் நன்கு பேணப்பட்ட நிலையிலும் கேசக்கற்றை பின்னால் குதிரைவால் போன்று கட்டப்பட்ட நிலையிலும் மேற்படி சடலம் காணப்பட்டது.
கிங் வம்சகாலத்தைச் சேர்ந்த கல் லறையொன்றிலிருந்தே இந்த மம்மி நிலையிலான சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சடலத்தின் தலையின் ஓரத்தில் சுற்றிவர கேசம் மளிக்கப்பட்டு நடுவிலுள்ள கேசம் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. அக்கால கட்டத்தில் அரசாட்சிக்கு விசுவாசமற்றவர்களுக்கும் தேசத் துரோகத்திற்காக மரணதண்டனை விதிக்கப்படுபவர்களுக்கும் மேற்படி கேச அலங்காரத்தை செய்வதற்கு ஆளும் கிங் வம்சத்தினர் உத்தரவிட்டு வந்தனர்.
சீனாவிலுள்ள ஒவ்வொரு 10 கல்லறைகளில் 9 கல்லறைகள் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறு கின்றனர்.
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள கல்லறை களை புல்டோஸர் வாகனங்களால் தகர்த்து அதிலுள்ள பண்டைய கலைப்பொருட்களையும் பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையர்கள் களவாடி வருகின்றனர்.
புஜியன் மாகாணத்தில் நிங்டி எனும் இடத்தில் அமைந்துள்ள மேற்படி கல்லறை 1882 ஆம் ஆண்டுக்கு ற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்லறைத் தளமானது இதற்கு முன் 1950 களில் கொள்ளையிடப்பட்டது.
இதன்போது, கொள்ளையர்கள் அதிலுள்ள சடலங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவற்றை கல்லறையில் விட்டுச்சென்றனர்.
ஆனால், தற்போது அக்கல்லறையில் திருட்டை மேற்கொள்ள முயற்சித்தவர்கள், திருடுவதற்கு எதுவும் கிடைக்காத நிலையில் சடலங்களை வெளியே அநாதரவாக விட்டுவிட்டு கல்லறைகளுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக