தனியொரு ஈரலுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சம்பவம் பார்சிலோனாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் புதன்கிழமை வெளியிடப் பட்டுள்ளன.
நூரியா, மார்தா பெலியு என்ற இந்த 6 மாத வயதான இரட்டைப் பெண் குழந்தை களை பார்சிலோனாவிலுள்ள வால் டிஹெப்ரோன் மருத்துவமனையில் 60 மருத்துவ உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவினர் 7 மணிநேர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மேற் கொள்ளப்பட்ட இந்த சிக்கல் மிக்க அறுவைச் சிகிச்சையையடுத்து நூரியாவும் மார்தாவும் தற்போது உடல்நலம் தேறி முழுமையான ஆரோக்கிய நிலையை அடைந்துள்ளமை ஒரு மருத்துவ சாதனையாக கருதப்படுகிறது.
இந்த குழந்தைகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி, கர்ப்பந் தரித்து 34 வார காலத்தில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.பிறக்கும் போது இந்த குழந்தைகள் தலா 3 இறாத்தல் 5 அவுன்ஸ் நிறையை மட்டுமே கொண்டிருந்தன.
இந்நிலையில், இரு குழந்தைகளுக்கும் பொதுவாக காணப்பட்ட ஈரலை அறுவைச் சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரித்து அக்குழந்தைகளை பிரித்து அவர்கள் தனித் தனியே இயல்பு வாழ்க்கை வாழ வழிவகை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக