ஞாயிறு, 25 மார்ச், 2012

அமெரிக்காவின் இன்னொரு அதிரடி

இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது. இலங்கை மீதான தனது பிடியை இறுக்கும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நட வடிக்கையாக இந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருகிறது.



ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட அமெரிக்கா வின் தீர்மானம் நிறை வேற்றப்பட்டமையால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்குவற்கு முன் இந்த அறிக்கை வெளிவரவுள்ளது.


இந்த விசாரணை அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ் ரீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட்சபையில் சமர்ப்பிக்கிறார்.


இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காகக் கடந்த பெப்ரவரிமாதம் ஸ் ரீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன்போது அவர் அரசதரப்பு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.


வன்னிக்குப் பயணம் செய்த அவர் அங்கு போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுடனும் நேரில் கலந்துரையாடினார். இதன்போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் நிலை தொடர்பாக அவர்களின் பெற்றோர் கண்ணீருடன் எடுத்துக் கூறியிருந்தனர். அத்துடன், அரசுக்குத் தெரியாமல் முல்லைத்தீவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்ட அவர் இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்திருந்தார்.


இவற்றைக் கொண்டு அவர் தயாரித்த அறிக்கையே அடுத்த வாரம் அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை தொடர்பாக, தூதுவர் ஸ் ரீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்குச் சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும்.ஸ் ரீபன் ராப்பின் இந்த அறிக்கையும் இலங்கை அரசுக்குப் பெரும் தலையிடியாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதனால் அமெரிக்கா மீதான இலங்கையின் சீற்றம் மேலும் அதிகரிக்கும் எனவும் இது இரு நாடுகளுக்கிடையிலும் பெரும் விரிசலைக் கொண்டுவரும் எனவும் ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல