நபரொரரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 39 வயது பெண்ணொருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பார்க்ஸைட் எனும் இடத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஹெலன் எல்டர் என்ற மேற்படி பெண், நபரொருவரின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்து அந்நபரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அடெலெயிட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக ஆஜரான ரெபேக்கா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்தார்.
சட்டக்காரணங்களுக்காக ரெபேக்காவால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், மேற்படி வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர் வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக