காட்டில் நெருக்கடிகளுக்கு மத்தியில் தாக்குப்பிடித்தல் தொடர்பான நிகழ்வொன்றில் பங்குபற்றிய பெண்ணொருவரின் மார்பகம் மல்யுத்த போட்டியொன்றின்போது வெடித்த சம்பவம் மலேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காக மலேஷியாவின் தூரப்பிரதேச காட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு ஒளிப்பதிவும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
இதில் பங்குபற்றிய பெண்கள் 10 பேர் சேற்று மல்யுத்த போட்டியொன்றிலும் ஈடுபட்டனர். அப்போது சுவீடனைச் சேர்ந்த லீனா ஹெல்க்விஸ்ட் எனும் 24 வயதான பெண், மார்பகத்தை பெரிதாக்கி அழகுபடுத்துவதற்காக செயற்கையாக பொருத்தியிருந்த சிலிக்கன் பை திடீரென வெடித்து உடைந்தது.
இதனால் அப்போட்டி நிகழ்ச்சி கைவிடப்பட்டு அப்பெண் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
'மார்பகம் திடீரென வெடித்துவிட்டதால் என்ன நடந்ததென புரியாமல் ஏனைய யுவதிகள் திகைத்துப்போய் ஒருவரையொருவர் பெரும் ஆச்சர்யத்துடன் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர்' என அப்பெண் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இவர் தற்போது அவரது சொந்த நாடான சுவீடனில் சத்திரசிகிச்சை செய்து மீன்டும் ஒரு புதிய சிலிக்கன் பையை வைத்துக்கொள்வதற்கு காத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக