யாழ். கொட்டடி மாட்டு இறச்சிக்கடை உரிமையாளரினால் யாழ். அரச அதிபருக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாட்டினைத் தடுத்தி நிறுத்தியமைக்கான தகுந்த காரணம் சமர்ப்பிக்குமாறு கோரியே யாழ்.அரச அதிபருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
எந்தக் காரணமும் இன்றி ஒருவரின் தொழிலைத் தடுத்து நிறுத்தியமை, இந்த உரிமையாளரின் மன உளச்சலுக்கு ஆளாக்கியமை தொடர்பாக அரச அதிபர் மீது வழக்குத் தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐரோப்பிய இன காளை மாட்டினை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்து நிறுத்தியமைக்காக யாழ். அரச அதிபர் மற்றும் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் காரணம் கேட்டு யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் திருநெல்வேலிப் பகுதியில் நபரொருவர் ஏலத்தில் விடப்பட்ட ஐரோப்பிய அரிய இன காளை மாட்டினை வாங்கி அதனை வெட்டுவதற்கு பெரியளவில் விளம்பரம் செய்து ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
அந்த வேளையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மூலம் காளை மாட்டினை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் குறித்த காளை மாட்டினைக் கொள்வனவு செய்தவர் யாழ். நீதிமன்றத்தில் மாட்டினை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதனடிப்படையில் மேற்படி அழைப்பாணை நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ளது. காரணத்தை 30 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ். நீதிவான் மா.கணேசராசா பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக