தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு செய்திச் சேவையைச் சேர்ந்தவர்கள் என்று சுயம் காட்டிக் கொள்கின்ற லங்காசிறியினர் போருக்குப் பின்னர் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற இலங்கையில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றமைக்கும், வடக்கு மக்களின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கின்றமைக்கும் திட்டமிட்டு பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்து உள்ளன.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை, இலுப்பம் பூ இல்லா விட்டால்
மண்ணாங்கட்டியும் சர்க்கரை என்பது போல ஒரு காலத்தில் இணையத் தமிழ் செய்தி உலகத்தில் லங்காசிறியும், லங்காசிறியோடு தொடர்புபட்ட தமிழ்வின், மனிதன் போன்றனவும் கோலோச்சின என்பது உண்மைதான். ஆயினும் தமிழ் சி. என். என், அதிர்வு போன்ற இணையங்களின் வருகையால் இவை உண்மையில் முகவரி இழந்து போயின.
எந்தவொரு ஊடகத்தினதும் உண்மையான நோக்கம் வாசகர்களுக்கு செய்திகளை உடனுக்குடனும், நடுநிலையாகவும், சரியாகவும் கொடுக்க வேண்டும் என்பதுதான். இது ஊடக தர்மம் என்று பொதுவாக சொல்லப்படுகின்றது. ஆனால் லங்காசிறி குழுமத்துக்கு ஊடக தர்மம்
என்று எதுவும் கிடையாது.
லங்காசிறி எப். எம் ஊடகக் குழு
இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகின்றது என்று காட்டுதல், புலம்பெயர் தமிழர்களை உசுப்பேற்றுதல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் புகழைப் பாடுதல், மரண அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்கள் என்கிற பெயரில் புலம்பெயர் தமிழர்களினதும், தாயகத் தமிழர்களினதும் பணத்தை ஏப்பமிடுதல்
போன்றனதான் லங்காசிறி குழுமத்தின் ஊடக வியாபாரப் பொறிமுறை. இதில் பிரமாண்ட வெற்றியும் கண்டு விட்டது.
செய்திகளை வெளிப்படுத்துகின்ற ஊடகங்கள் சுயம் வெளிப்படைத் தன்மை உடையனவாக இருக்க வேண்டும். ஆனால் லங்காசிறி குழுமம் குறித்த உண்மையான விபரங்கள் வாசகர்களுக்கு வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டு உள்ளன என்பதற்கு அப்பால் போலியாக கொடுக்கப்பட்டும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. புலிச் சார்பு ஊடகம் என்று புலம்பெயர் தமிழர்களுக்கு காட்டிக் கொள்கின்ற லங்காசிறி நிறுவனம் உண்மையில் ஒரு சிங்களப் பெண்ணின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டு உள்ளது. லங்காசிறி எப். எம் லண்டனில் இருந்து இயங்குகின்றது என்று இவர்கள் சொல்லி வந்தாலும் தமிழ்நாட்டில் மதுரையில் இருந்துதான் இந்த எப். எம் செயல்பட்டு வருகின்றது.
லங்காசிறி எப். எம் பங்காளர்கள்
இலங்கைப் புலனாய்வுத் துறையினரும், வெளிநாடுகளின் புலனாய்வுத் துறையினரும் எடுத்து இருக்கக் கூடிய அதிரடி நடவடிக்கைகளால் லங்காசிறி குழுமத்தினதும், லங்காசிறியோடு தொடர்புபட்ட தமிழ்வின், மனிதன் போன்ற இணையச் செய்தித் தளங்களினதும் இருப்பு பெரிய அளவில் கேள்விக்குறிக்கு ஆகி உள்ளது. இலங்கை உட்பட பல நாடுகளில் இத்தளங்களைப் பார்வையிட முடியாத சூழல் நிலவுகின்றது.
போட்டி இணையச் செய்தித் தளங்களின் வருகையால் விலாசம் இழந்து போன லங்காசிறி, பன்னாட்டுப் புலனாய்வுத் துறையினரதும் நடவடிக்கையால் தளர்ந்து போய் விட்டது.
அறிந்தவன் அறிவான் அரியாலைப் பனாட்டின் சுவையை என்பது பழமொழி. இவ்வளவு காலமும் தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பணத்தைப் பகல் கொள்ளை அடித்து சுகமாக வாழ்ந்து வந்திருக்கின்ற லங்காசிறி குழுமத்தினர் இச்சுகத்தை இழக்க விரும்ப மாட்டார்கள் என்பது வெளிப்படை.
எனவே தமிழர்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றமைக்கு இன்னொரு மார்க்கத்தை கண்டுபிடித்து உள்ளார்கள். அதுதான் வர்த்தகம் என்கிற பெயரில் வட மாகாணத்துக்குள் குறிப்பாக யாழ்ப்பாணத்துக்குள் ஊடுருவுகின்ற திட்டம். வடக்குத் தமிழர்களின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கின்றமை இவர்களின் முன்னிலைத் திட்டமாக இருந்தாலும், நாட்டுக்குள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துதல், சில புலனாய்வு வேலைகளை அரசுக்கு சார்பாகவும்,
எதிராகவும் செய்தல் ஆகிய உப திட்டங்களையும் கை வசம் வைத்து இருக்கின்றார்கள்.
லங்காசிறி எப். எம் நிறுவனத்தில் பங்காளர்களாக மதுரைக்காரர்கள் சிலர் உள்ளனர். இந்நபர்கள் மதுரையில் வர்த்தக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக தொழில் வர்த்தக சங்கம் என்கிற அமைப்பில் முக்கிய சில பொறுப்புக்களைக் கை வசம் வைத்து இருக்கின்றார்கள். எனவே தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் ஊடாக பங்காளிகளை வட மாகாணத்துக்குள் காலூன்ற வைப்பதே லங்காசிறி குழுமத்தின் நகர்வாக உள்ளது.
இதன் ஒரு கட்டமாக லங்காசிறி எப். எம் சேவையின் பங்காளர்களில் ஒருவரான மதுரைக்காரர் ஜே. கே. முத்து என்பவர் தலைமையிலான குழு ஒன்று தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் பெயரால் கடந்த நாட்களில் கொழும்பு வந்து உள்ளது. இவர்களின் வருகை குறித்து லங்காசிறி குழுமம் ஆஹா, ஓகோ என்று செய்திகள் பிரசுரித்து வருகின்றது. இவர்களின் வியாபார
முன்னெடுப்புக்களால் பாலும், தேனும் யாழ்ப்பாணத்தில் கொட்டப் போகின்றது என புளுகாமல் புளுகுகின்றது. ஆனால் இருக்கின்ற வெள்ளத்தையும் வருகின்ற வெள்ளம் அள்ளிப் போகின்ற கதைதான் நடக்கப் போகின்றது என்பது ஆச்சரியத்துக்கு உரிய விடயமே அல்ல.
தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் என்று சொல்லப்படுகின்றவர்களிடம் நாம் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம்.
எனவே லங்காசிறி குழுமத்தின் உண்மையான முகத்தை வடக்கு மக்கள் சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்களின் மோசடி வலையில் சிக்கி விட கூடாது. ஏனென்றால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள
ஈஸ்பரபாதம் சரவணபவனால் நடத்தப்பட்ட சப்ரா வங்கிக் கொள்ளையை விட லங்காசிறி குழுமத்தின் கொள்ளை பயங்கரமானவையும், பாரதூரமானவையுமான பாதிப்புக்களை நம்மவர்கள் வாழ்வில் ஏற்படுத்தி விடும்.
தாய்நாடு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக