படிக்கட்டுகளில் ஏறக்கூடிய ரோபோ சக்கர நாற்காலியை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள், வயதானோர், நோயாளிகள் பயன்படுத்தும் விதத்தில், ஜப்பானின், சிபா தொழில் நுட்ப மைய பொறியியலாளர்கள் ரோபோ சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளனர்.
இந்த சக்கர நாற்காலி, சாதாரண சக்கர நாற்காலியை போல் நான்கு சக்கரங்களை கொண்டதுதான் என்றாலும் வழியில் படியோ அல்லது பள்ளமோ காணப்பட்டால் இந்த நாற்காலியின் சக்கரங்கள் கால்கள்போல் வடிவம் மாறி படி ஏறி விடும். வழியில் உள்ள தடைகளையும் தண்டி விடும். இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள், ஜாய்ஸ்டிக் கருவி கொண்டு இதை இயக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக