ராஜபக்ஷ குடும்பத்தினருக்குள் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விவகாரம் என்னவென்றால், கோத்தபாயவை துரத்திய மோர்டார் சைக்கிள் தான். அட அவர் காரை துரத்தினால் என்ன அவருக்கு பாதுகாப்பு இருக்குத் தானே என்று நினைத்துவிடாதீர்கள்.
இது அதிலும் கொஞ்சம் சீரியஸ் ஆனா மேட்டரா போச்சு. குறிப்பிட்ட கறுப்பி நிற மோட்டார் சைக்கிள் கோத்தபாய பேசிக்கொண்டு இருந்த மேடைக்கு அருகாமையில் வந்துவிட்டது போங்கள் ! அங்கு என்ன தான் நடந்தது ? வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்று கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. கொழும்பு � 07 இலுள்ள 120 வருடங்கள் பழமை வாய்ந்த குதிரைப் பந்தயத்திடல், பார்வையாளர் கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட தினம் அது.
ஆங்கிலேயர் காலத்து கட்டடம் என்றபடியால், அது இடிந்து விழும் தறிவாயில் இருந்தது. இதுவே புனரர்நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட விழாவில் கலந்துகொண்ட பசில், மற்றும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அவ்வளவாக பலமாக வழங்கப்படவில்லை. இது இவ்வாறு இருக்க முதலில் பேசிய பசில் தனது உரையை நிறைவுசெய்துவிட்டு அமர்ந்து விட்டார்.
பின்னர் கோட்டபாய ராஜபக்ஷ எழுந்து உரையாற்றினார். இவர் உரையாற்றிக்கொண்டு இருந்தவேளை இவர் நின்றிருந்த மேடைக்கு அருகாமையில் ஒரு கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.
உரையாற்றிக்கொண்டு இருந்த கோட்டபாய மோட்டார் சைக்கிளைப் பார்ப்பதும், பின்னர் தனது உரை எழுதப்பட்ட கடதாசித் துண்டைப் பார்ப்பதுமாக மாறி மாறிப் பார்த்தார். எங்கே மோட்டார் சைக்கிளில் வரும் நபர் தன்னைத் தாக்குவாரோ என்று அவர் பயந்தது அப்படியே TV திரைகளில் தெரிந்தது. தலைக் கவசம் அணிந்துவந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுணர், மேடை வரை வந்துவிட்டு பின்னர் அப்படியே அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதில் வியப்பான விடையம் என்னவென்றால், மோட்டார் சைக்கிள் வந்தது யார் என்று இதுவரை பொலிசாருக்குத் தெரியாதாம். வந்தவர் அப்படியே அங்கிருந்து வெளியே செல்ல அவரைப் பொலிசார் அனுமதித்தும் உள்ளனர். வந்தது யார் என்று தெரியாத நிலை இருக்கும்போது, அவரை எவ்வாறு வெளியே செல்ல அனுமதித்தீர்கள் என்று, வாசலைக் காவல் காத்த 2 பொலிசாரைப் பிடித்து புலனாய்வுத்துறையினரும், கோத்தபாயவின் பாதுகாப்பு பிரிவினரும் நோண்டி நொங்கு எடுத்துள்ளனராம். இதேவேளை நிகழ்வில் பாதுகாப்பு வழங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் இருவர் தங்களின் கடமையை அலட்சியம் செய்தமைக்காக இவ்விருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் மேலும் அறியப்படுகிறது.
சினமன் -கார்டன் பொலிசார் மேற்படி இவ்விருவரையும் வேலையில் இருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர் யார் ? ஏன் இவ்வாறு வந்துசென்றால் என்பது எல்லாமே மாயமாக உள்ளது. ஒருவேளை ஏதாவது நடந்திருந்தால் புலம் பெயர் மக்கள் வெடிகொழுத்தி கொண்டாடி இருப்பார்களோ என்னவோ ? மொத்தத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபாய யுத்தவெற்றிக்குப் பின்னர் கூட நிம்மதியாக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக