திருமண வைபவமொன்றில் மணப்பெண் மாயமாக மறைந்த சந்தர்ப்பத்தில், அங்கு நின்ற பெண் ஒருவர் திடீர் மணப்பெண் ஆக்கப்பட்டு திருமணம் நடத்தப் பட்டுள்ளது. இத்திருமண வைபவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டா ரும் திருமண வைபவத்தை நடத்தி வைப்பதற்காக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திற்கு உறவினர்கள் சகிதம் வந்திருந்தனர்.
இவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்ற 37 திருமண வைபவங்களில் 20 ஆவ தாக ஆலய முன்றலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இந்த ஜோடிக்குரிய முறை வர மாப்பிள்ளையும் பெண்ணும் ஆலய முன்றலுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் போதே மாப்பிள்ளை மட்டும் தனியே நிற்க மணப்பெண் மாயமான விபரம் தெரிய வந் துள்ளது.சங்கடத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான உறவுகள் மாயமான மணப் பெண்ணை அங்கு தேடத்தொடங்கியுள்ளன.நேரம் செல்லச்செல்ல இருவீட்டாருக்கும் நிலைமை விபரீதம் எனத் தெரியவந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு நின்ற மாப்பிள் ளையின் மச்சாள் முறை உறவான பெண் மணப் பெண்ணாக அவரது சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டார்.பதற்றத்தை ஏற்படுத்திய இந்தச் சூழ்நிலையில் புதிய மணப்பெண் கிடைத்து விட அந்தத் திருமணம் விறுவிறுப்பாக இனிதே நடைபெற்றது.
இக்கட்டான சூழ்நிலையில் நிலைமைப் புரிந்து கொண்டு மச்சாள் முறையான உறவுப் பெண் நடந்து கொண்டதாக உறவுகள் பலரும் அப்பெண்ணைப் பாராட்டினர்.சினிமாப் பாணியில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் செல்லச் சந்நிதி ஆலயப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக