ஈழத்து காந்தி என்கிற பெயருக்கும், கௌரவத்துக்கும் உண்மையில் உரியவர் திருகோணமலையில் வசித்து வருகின்ற காந்தி ஐயா.
யாழ்ப்பாணத்தில் மாதகல் பிரதேசத்தில் 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி பிறந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கந்தையா. ஐந்தாவது வயதில் இருந்து சைவ உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றார்.
ஆசிரியப் பணியே அறப் பணியாக கொண்டு 25 வருடங்கள் சேவை ஆற்றினார். திருகோணமலையை வதிவிடமாக வரித்துக் கொண்டார். அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்.
1945 ஆம் ஆண்டு முதல் காந்திய வழியில் முழுமையாக நின்று வருகின்றார். 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இடுப்பில் ஒரு துண்டு வேட்டியும், மார்பில் ஒரு சால்வையுமாக நடமாடுவார். நரைத்த தாடியுடன் கூடியதாக கருணை பொழியும் முகம் உடையவர். யார் இவரிடம் சென்றாலும் ஆனந்தம்... ஆனந்தம் என்று முக மலர்ச்சியுடன் சொல்லி காந்திய உணர்வோடு வரவேற்பார். இக்காரணங்களாலேயே இவர் காந்தி ஐயா அல்லது காந்தி மாஸ்டர் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்றார். திருகோணமலைக்கு சென்று காந்தி ஐயா என்று சிறுபிள்ளைகளிடம் கேட்டால்கூட இவரைப் பற்றி மிகவும் ஆர்வமாக சொல்வார்கள்.
இவர் ஒரு சிறந்த வாசகன். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது இவரின் நம்பிக்கை. இவரது வீடு முழுவதும் புத்தகக் கும்பல்கள்தான். இவைதான் இவர் சேர்த்த சொத்துக்கள். ஏராளமானவர்களின் வாசிப்புப் பழக்கத்துக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றார். திருகோணமலையில் இலக்கிய விழாக்கள் என்றால் இவருக்கு ஒரே கொண்டாட்டம். தவற விட மாட்டார். சிறந்த நகைச் சுவை உணர்வும் உடையவர். சமயப் பணி, சமூகப் பணி ஆகியவற்றை இவரின் கண்கள் என்று கூறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக