கற்பழிக்கும் போது பெண்கள் அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தோனேசிய நீதிபதி கருத்துச் சொன்னது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வுக்கு வந்த நீதிபதி முகமத் டாமிங் சனுசி என்பவரிடம் கற்பழிப்புக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், கற்பழிக்கும் நபரும் கற்பழிக்கப்படும் பெண்ணும் அனுபவிக்கும் பட்சத்தில் மரண தண்டனை குறித்து யோசிக்க வெண்டும் என்று சொன்னதோடு நில்லாமல், கற்பழிக்கும் போது பெண்கள் அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
இந்த பதிலால் தேர்வுக்குழுவினர் மட்டுமல்லாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதன் பிறகு தேர்வுக்குழு உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
உடனே சுதாரித்த நீதிபதி சனுசி, தான் சொன்ன பதிலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மேலும் தான் ஒரு ஐஸ் பிரேக்கிங்காக தான் (எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத செயலைச் செய்து அதிர்ச்சி ஏற்படுத்துவது) இப்படி சொன்னதாகவும் தெரிவித்தார்.
நேர்காணல் முடிந்து செய்தியாளர்களிம் பேசிய நீதிபதி சனுசி, தான் இந்தோனேசிய மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார்.
ஆனால் இந்தோனேசியாவில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகள் நீதிபதி சனுசியைத் தேர்வு செய்ய எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும் பெண்கள் உரிமைக்குழு நீதிபதி சனுசியின் பேச்சை நீதிமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்க கோரிக்கை வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக