தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியை படுகொலை செய்கின்ற அல்லது மடக்கிப் பிடிக்கின்ற திட்டம் ஒன்றை 1990 இன் ஆரம்பத்தில் அரசு முன்னெடுத்து உள்ளது.
அப்போது பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரட்ணதான் இத்திட்டத்தின் சூத்திரதாரி.
மதிவதனி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வழிபட செல்கின்றமை வழக்கம்.
இதன்போதே இவர் மீது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த உத்தேச தாக்குதலின் தொடர்ச்சியாக இன்னொரு தாக்குதலை நடத்த இராணுவத்தின் கூட்டு நடவடிக்கைப் பிரிவு தயார்ப்படுத்தப்பட்டு இருந்தது.
ஆயினும் பொட்டம்மானின் புலனாய்வுத் துறை இத்திட்டங்களை மோப்பம் பிடித்து விட்டது. ஆயினும் இவை புதிய சவால்களாக புலிகள் இயக்கத்துக்கு அமைந்தன.
இத்திட்டங்கள் தலைவர் பிரபாகரனை பெரிதும் கோபப்பட வைத்து விட்டன.
கொழும்புக்கு மிகவும் நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென புலித் தலைமை கறுவிக் கொண்டது.
பொட்டம்மானின் முக்கிய சீடர்களில் ஒருவரான சார்ஸ் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சில வாரங்களில் கொழும்பில் மாபெரும் இரு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கூட்டு நடவடிக்கைப் பிரிவின் தலைமை அலுவலகம் வெடித்துச் சிதறியது. அதே போல கார்க் குண்டு வெடிப்பில் ரஞ்சன் விஜேரட்ண படுகொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக