ஈழ விடுதலை போராட்ட அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்க முன்வந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதை பெற்றுக் கொண்டது.
1980 களின் ஆரம்பங்களில் ஈ.பி,ஆர்.எல்.எவ், ஈரோஸ், ரெலோ, புளொட், புலிகள் அமைப்பு ஆகிய நான்கு அமைப்புகளும் இந்தியாவிடம் ஆயுதப் பய்யிற்சி பெற்றன.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் வைத்து விசேட கொமாண்டோக்களால் இச்சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
புலிகளின் மூத்த, முன்னணி உறுப்பினர்களில் ஒருவர் பொன்னம்மான். இவரது தலைமையில்தான் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பயிற்சி பெற போய் இருந்தனர்.
இவர்களில் சதாசிவம் கிருஷ்ணமூர்த்தி என்கிற கிட்டுவும் ஒருவர்.
இவர்களுக்கு பயிற்சி வழங்கிய இந்திய கேணலுக்கு புலிகள் இயக்கம் மீது இனம் தெரியாத, அளவு கடந்த பற்றுதல் ஏற்பட்டு விட்டது.
புலிகளுக்கான பயிற்சி நிறைவடைந்து விட்டது. விடை பெறுகின்ற இறுதித் தருணம். பிரிவுத் துயரம் இந்திய கேணலின் கண்களில் நீராக வடிந்தது.
இதை கண்ணுற்ற கிட்டு ஒரேயடியாக கலங்கிப் போனார். கேணலின் மடியில் விழுந்தார். அழுதார். கட்டி அணைத்து ஆரத் தழுவிக் கொண்டார்.
பின்னர் புலிகள் விடை பெற்றுச் சென்றனர். பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில் அடையாறில் தங்கி இருந்தார்.
ஆயுதப் பயிற்சிக்கு சென்றிருந்த புலிகள் தலைவரை சந்தித்து பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கண்ணீர் சிந்திய இந்திய கேணலின் மடியில் விழுந்து, தளபதி கிட்டு அழுதமையையும் எடுத்துச் சொல்லினர்.
இதை கேட்டு விட்டு பிரபா மௌனமாகி விட்டார். தலைவர் எதோ கூறப்போகின்றார்? என அனைரும் அவரது முகத்தையே உற்று நோக்கியபடி இருந்தனர்.
“ நாங்கள் ஒரு நோக்கத்துக்காகவே இந்தியாவிடம் ஆயுதப் பயிற்சி பெறுகின்றோம். இந்தியாவும் இன்னொரு நோக்கத்துக்காகவே எமக்கு பயிற்சி வழங்குகின்றது. காலப் போக்கில் இதே இந்திய படைக்கு எதிராக தாக்குதல் நடந்த நானே உங்களுக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டிய சூழல் வரவும் கூடும்.. அப்போது கிட்டுவும் இதே இந்த கேணலுக்கு எதிராக சண்டையிட வேண்டியும் வரலாம். ”
இவ்வாறு மௌனத்தை கலைத்து விட்டு கண்டிப்பாகவும், இறுக்கமாகவும் சொன்னார் தலைவர்.
தலைவரின் உபதேசத்தை கேட்ட அனைவரும் மௌனத்தில் உறைந்து போய்விட்டார்கள். கிட்டுவின் முகத்தில் ஈயாடவில்லை.
பிந்திய நாட்களில் இந்திய படையோடு புலிகள் யுத்தம் தொடங்கியபோது தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.
ஆனாலும், தலைவரின் தீர்க்கதரிசனம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டது குறித்து துயரப்பட இம்மூத்த உறுப்பினர்களில் எவருமே உயிருடன் இன்று இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக