வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 20

தவபாலன் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முழுமையாக இணைத்ததைத் தொடர்ந்து அவர் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக ஆரம்பத்தில் புலிகளின் ஏனைய துறைசார்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு மரியாதை கொடுத்து வந்த தவபாலன், இறைவன் என்ற நாமத்தைப் பெற்று தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து ஏனைய துறைசார்ந்த போராளிகளை மதிக்கத் தவறியிருந்தார். இதனால் பல துறைசார்ந்த போராளிகளும் கடுப்புடனேயே இருந்தனர்.

இதைவிட தவபாலன் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து தவபாலனின் குடும்பத்திற்கும் இவரிற்குமிடையில் குழப்பங்கள் உருவாகியது. தவபாலனின் மனைவி தீவகத்தை சொந்த இடமாகக் கொண்ட ஒரு கூட்டுறவுப் பணியாளர் ஆவார். இவர் தனது கணவன் போராளியாக இணைவார் என்று ஒருபோதுமே எண்ணிப் பார்த்தது கிடையாது. சாதாரணமாக இயக்க நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பணியாளர் போன்று தனது கணவரும் பணியாற்றி தனது குடும்பத்தை பொறுப்புடன் வழிநடத்துவார் என எண்ணிய மனைவிக்கு தவபாலனின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தது.முடிவை மாற்றுமாறு தவபாலனிடம் மனைவி மன்றாடிக் கேட்டபோதும் இறைவன் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் சில நாட்கள் இவர்களது உறவு முறுகலுடன் காணப்பட்ட போதும் பின்னர் இவ்விடயத்தில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் ஜவான் நேரடியாகத் தலையிட்டு தவபாலனின் மனைவியைச் சமாதானப்படுத்தி, தவபாலனை ஒருபோதுமே களமுனைக்கு அனுப்பமாட்டேன். அவரை எப்பொழுதும் என்னுடனேயே வைத்திருப்பேன் என்று உறுதிமொழி வழங்கினார். இதனைத் தொடர்ந்து முறுகல்நிலை முடிவுக்கு வந்தது.

தவபாலன், இறைவன் என்ற நாமத்துடன் புலிகளின் குரல் நிறுவனத்தில் தன்னை முழுமையான போராளியாக இணைத்து செயற்படத் தொடங்கிய காலத்தில் புலிகளின் குரல் நிறுவனத்திற்குரிய மென்பொருட்கள், நவீன உபகரணங்கள் என்பனவற்றை வன்னிப் பகுதிக்கு எடுத்து வருவதற்குரிய நேரடி டீலை இறைவனே மேற்கொள்ளத் தொடங்கினார். ஏற்கனவே நோர்வே ஊடாக சில மென்பொருள்களையும், தொடர்பாடல்களுக்குரிய நவீன உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்குரிய முயற்சிகளில் தமிழ்ச்செல்வன் ஈடுபட்டு தோற்றுப்போயிருந்த சூழ்நிலையில் இறைவன் இச்செயற்பாட்டில் நேரடியாக ஈடுபடத் தொடங்கினார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரச உயர் அதிகாரிகள், தொண்டுநிறுவனப் பணியாளர்கள் ஆகியோருடன் நேரடி டீலை இறைவன் மேற்கொள்ளத் தொடங்கினார்.

இறைவன் மேற்கொண்டடீல் அனைத்துமே வெற்றி அளிக்காவிட்டாலும் சில டீல்கள் சாதகமாக அமைந்தன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவநேசன், ரவிராஜ் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறைவனின் கோரிக்கைகளை ஏற்று வன்னிக்கு வந்து செல்கின்ற பொழுது சில மென்பொருள்களையும், தொடர்பாடல் சாதனங்களையும் புலிகளின் குரல் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று இறைவனிடம் கையளித்து வந்தனர். இவ்வாறு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் U.N.H.C.R நிறுவனத்தில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பெயரை ஒத்த ஒருவர் இந்த உபகரணங்களை புலிகளிற்கு தமது தொண்டு நிறுவன வாகனத்தில் எடுத்து வந்து கொடுத்து வந்தார். தற்போதும் இந்தப் பணியாளர் ஐ.நா நிறுவனத்தில் வவுனியாவில் இருந்தவாறு பணியாற்றி வருகின்றார்.

இவரே தமிழ்நெற் எனப்படும் இணையத்தளத்தின் வன்னிச் செய்தியாளராக கடமையாற்றிய செய்தியாளர் ஒருவரை மெனிக் முகாமிலிருந்து தமது தொண்டு நிறுவன வாகனத்தில் கடத்தி வந்து வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைத்தார். குறித்த செய்தியாளர் வெளிநாடு சென்று இலங்கைக்கு எதிரான போர்க் குற்றங்கள் தொடர்பான செய்திகளை தயாரித்து வரும் சனல் 4 உடன் இணைந்து அதற்கு உதவிவருகிறார்.

இவ்வாறு இறைவன் ஐ.நா நிறுவனத்தில் உயர் அதிகாரியை கைக்குள் போட்டு தனது நிறுவனத்திற்கு வேண்டிய சாதனங்களை கொள்வனவு செய்து வந்தார். இதனால் இறைவனின் பலமும் இறைவன் மீதான நம்பிக்கையும் இதன் பொறுப்பாளராக விளங்கிய ஜவானிடம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஜவானை பிரபாகரன் சந்திப்பு ஒன்றிற்காக அழைத்திருந்தார். இச்சந்திப்பில் புலிகளின் குரல் நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்களை அரசியல் துறையுடன் களமுனைக்குரிய ரீமில் இணைப்பது பற்றிய பேச்சுக்களே இடம்பெற்றது.

இதன்போது தவபாலன் எனப்படும் இறைவன் தொடர்பாகவும், குடும்ப நிலைப்பாடு தொடர்பாகவும், இறைவனின் தற்போதைய செயற்பாடுகள், புதிய டீல்கள் தொடர்பாகவும் ஜவான் எனப்படும் தமிழன்பன் பிரபாகரனிடம் எடுத்து விளக்கினார். இதன்பின் பிரபாகரன் இறைவனை தான் நேரடியாக சந்திப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்யுமாறும் அன்று மாலையே சந்திப்பதற்குரிய ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் தமிழன்பனிடம் பணிப்புரை விடுத்தார்.

இது தமிழன்பனிற்கு மட்டுமல்ல இறைவனுக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகவே இருந்தது. ஏனெனில் பிரபாகரனை சந்திப்பது இயக்கத்தில் இருக்கின்ற சிலருக்கு மட்டுமே கிடைக்கின்ற சந்தர்ப்பமாக இருந்தது. கரும்புலிகளை தவிர வேறு சாதாரண போராளிகள் பிரபாகரனை அரிதாகவே சந்தித்து வந்தனர். பிரபாகரனைச் சந்திப்பதாக இருந்தால், அதுவும் புலிகளின் குரல் நிறுவனம் தமிழ்ச்செல்வன் ஊடாக அனுமதி கோரி அந்த அனுமதி கிடைத்த பின்னரே சந்திக்க முடியும். அது இலகுவான விடயமல்ல. ஆனால் இறைவன் பிரபாகரனை மொத்தம் 5 தடவைகள் நேரடியாக சந்திக்கின்ற சந்தர்ப்பத்தை பெற்றிருந்தார். ஏற்கனவே 3 தடவைகள் பிரபாகரனை சந்தித்த பொழுது அந்த சந்திப்புக்கள் சாதகமானவைகளாகவும் பிரபாகரனுடன் விருந்து உண்ணுகின்ற அளவிற்கு அமைந்திருந்தன.

ஆனால் நான்காவது தடவை இடம்பெற்ற சந்திப்பு கசப்பானதாகவே இறைவனுக்கு இருந்தது. ஏனெனில் இறைவன் தொடர்பில் பல்வேறு குற்றச் சாட்டுகளை கடற்புலிகளின் தளபதி சூசை, அனைத்துலக தொடர்பக பொறுப்பாளராக இருந்த கஸ்ரோ மற்றும் களமுனைத் தளபதிகளான பால்ராஜ், சொர்ணம், தீபன் போன்றோர் பிரபாகரனிடம் முறையிட்டு இருந்தனர். இவர்களது குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழன்பனிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்காத பிரபாகரன் நேரடியாக சந்திப்பு ஒன்றிற்கு, இறைவனையும் அழைத்து வருமாறு தமிழன்பனிடம் தெரியப்படுத்தினார். குற்றம் சுமத்திய தளபதிகளையும் பிரபாகரன் தனது மறைவிடத்திற்கு அழைத்திருந்தார். இச்சந்திப்பின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளை தளபதிகள் காரசாரமாக இறைவன் முன்பாக பிரபாகரனிடம் முன்வைத்தனர்.

இதனையடுத்து கடுமையாக எச்சரிக்கப்பட்ட இறைவன் பிரபாகரன் முன் தலை குனிந்தவாறு நீண்ட நேரம் நிற்கவேண்டி ஏற்பட்டது. தொடர்ந்து ஏனைய துறைசார்ந்த தளபதிகளின் செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட இன்றிலிருந்து நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதிமொழியை பிரபாகரனிடம் இறைவன் வெளிப்படுத்தினார். கடுமையான எச்சரிக்கைகளை விடுத்த பிரபாகரன் ஜவானுடன் இறைவனை உடனடியாகவே அனுப்பிவைத்தார்.

இதனை அடுத்து தமது நிறுவன அலுவலகத்திற்கு வந்த இறைவன் ஒரு கிழமை விடுமுறை கோரி விண்ணப்பித்துவிட்டு விடுமுறையில் வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலும் பணியாற்றாமல் மௌனமாக தனது நாட்களை கழித்த இறைவன் விரக்திநிலையில் காணப்பட்டார். ஜவான் எவ்வளவோ சமாதானம் கூறியும் இறைவன் இறங்கிவரவில்லை. இந்நிலையில் தமிழ்ச்செல்வன் இறைவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் கூறியதுடன் தலைவர் எதையும் மனதில் வைத்திருக்கமாட்டார், உங்கள் தொடர்பில் நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் மற்றத் தளபதிகளை திருப்திப்படுத்துவதற்காக அவ்வாறு நடந்திருப்பார். என்னிடம் உங்கள் தொடர்பில் நல்ல கருத்துக்களையே தெரிவித்தார்.

உங்களை தொடர்ந்து வேலையை சிறப்பாக செய்ய சொல்லுமாறு என்னிடம் சொன்னார் என தலைவர் சொன்னது போன்று தமிழ்ச்செல்வன் இறைவனிடம் சொல்லி மீண்டும் வேலை செய்ய பணித்தார். இறைவன் மீண்டும் வேலை செய்யத் தொடங்கினார்.

இவ்வாறு பிரபாகரனை சந்தித்த நான்காவது சந்திப்பு கசப்பானதாக இருந்த சூழலில் ஐந்தாவது சந்திப்பு எப்படி இருக்கும் என்ற ஏக்கத்துடன் இறைவன் பிரபாகரனை சந்திக்கத் தயாரானார். இச் சந்திப்பு எப்படியிருந்தது? இச்சந்திப்பு விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழிகோலியதா? அல்லது வளர்ச்சிக்கு வழிகோலியதா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வே. அர்ச்சுணன்
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல