சனி, 16 பிப்ரவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 21

புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான ஐந்தாவது சந்திப்பில் என்ன நடக்குமோ? முன்னர் நடந்த சந்திப்புப் போல் கசப்பானதாக இருக்குமோ என்ற ஏக்கத்துடன் இறைவன் எனப்படும் தவபாலன் காத்திருந்த வேளை இந்த ஐந்தாவது சந்திப்பு ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அவசர அழைப்பு தமிழன்பன் எனப்படும் ஜவானிடம் விடுக்கப்பட்டது. உடனடியாக விடயத்தை இறைவனிடம் தெரியப்படுத்திய தமிழன்பன் இருவரும் சந்திப்பிற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சந்திப்பிற்காக இருவரும் விசுவமடுவில் உள்ள மறைவிடம் ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்த வேளை இவர்கள் சென்ற வாகனம் இடையில் பழுதடைந்து விட்டது. உடனடியாக விசுவமடு நகரத்திலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வரவழைத்து அதன் சாரதியை அந்த இடத்தில் இறக்கி விட்டுவிட்டு தமிழன்பன் தான் சாரதியாக அந்த முச்சக்கர வண்டியை செலுத்தியவாறு பிரபாகரன் குறிப்பிட்ட நேரத்திற்கு அவசரமாக அந்த மறைவிடத்திற்கு சென்று சந்திப்பில் கலந்து கொண்டனர். இச் சந்திப்பு வழமையை விட மகிழ்ச்சியாகவே இருவருக்கும் இருந்தது.

பிரபாகரன் தமிழன்பன் மற்றும் இறைவன் ஆகியோரை புகழ்ந்து பாராட்டியதுடன் போராட்டத்தில் மக்களை முழுமையாக இணைப்பதற்குரிய பங்களிப்பை புலிகளின் குரல் வானொலி செய்து வருவதாகவும், இந்த சேவை இனி வரும் நாட்களில் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்களிடம் சொன்னார். படையினர் பல திசைகளில் இருந்தும் முன்னேறி வருகின்ற சூழ்நிலையில் மக்களை குழப்பமடையாமல் வைத்திருக்கவேண்டியது புலிகளின் குரலின் பிரதான பணி எனவும் மக்கள் அனைவரையும் ஆயுதம் தூக்குகின்ற அளவிற்கு உங்களது பரப்புரைகள் அமைவதுடன் தற்போது இணையத்தளத்திலும் புலிகளின் குரல் வானொலிச் சேவை இடம்பெற்று வரும் நிலையில், புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற மக்களிடம் நிதி சேகரிப்பிற்குரிய பரப்புரைகளை வேகமாகவும், விரைவாகவும் முன்னெடுக்க வேண்டுமெனவும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இயக்கத்தில் விசுவாசமாக நடக்கின்ற ஒரு சிலரில் நீங்கள் இருவரும் பிரதானமானவர்கள் என்பது எனக்குத் தெரியும் என பிரபாகரன் இருவரையும் புகழ்ந்ததுடன் இருவரிற்கும் இரவு விருந்தும், ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்பு இரவு 8 மணியுடன் நிறைவடைந்த போதிலும் 9மணிக்கு இவர்களது இரவு விருந்து இடம்பெற இருந்த சூழ்நிலையில் ஒரு மணிநேரம் இருவரும் மனம் விட்டு பிரபாகரனுடன் பிற விடயங்கள் தொடர்பில் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தொடர்பில் கதை வந்ததது.

பிரபாகரன் தான் கூட்டமைப்பில் சிவநேசன், ஜெயானந்த மூர்த்தி, கஜேந்திரன், கஜேந்திர குமார் ஆகியோரைத் தவிர வேறு எவரையுமே நம்புவதில்லை எனவும், மற்றவர்கள் எங்களுடன் நாடகம் ஆடுகின்றார்களே தவிர எங்களுடன் விசுவாசமாக ஒரு போதுமே இருக்க மாட்டார்கள். நேரடியாக நெஞ்சில் குத்துகின்ற மகிந்தராஜபக்‌ஷவையும் நேரடியாக எங்களை எதிர்க்கின்ற டக்ளஸ் தேவானந்தாவையும் நம்பினாலும் எங்களுடன் சேர்ந்திருக்கின்ற சுரேஸ், மாவை போன்றவர்களை ஒரு போதுமே நம்பமுடியாது. எப்பொழுதும் இவர்கள் முதுகில் குத்தும் வேலையைத்தான் செய்வார்கள், இவர்களை நம்பி நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது. அவர்கள் தங்களது அரசியலுக்கு எங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் எங்களது அரசியலுக்கு அவர்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனந்த சங்கரி போன்று முகத்துக்கு நேராக துணிந்து கூறும் தைரியம் இவர்களுக்குக் கிடையாது. இவர்கள் எப்பொழுதும் தந்திரமாகவே செயற்படுவார்கள். எனவே இவர்கள் விடயத்தில் கவனமாக நடக்கவேண்டும் என பிரபாகரன் ஜவானிடமும், இறைவனிடமும் எடுத்துரைத்தார்.

உடனே ஜவான் சிரித்துக்கொண்டே, இறைவனுக்கு சுரேசையும், யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணிப் பத்திரிகை என்று கூறுகின்ற பத்திரிகையையும் அதன் நாடாளுமன்ற உறுப்பினரையும் கண்ணிலே காட்டக் கூடாது. அவர்கள் தொடர்பாக ஏதாவது செய்திகள் வந்தால் இறைவன் அதை ஒலிபரப்பிற்கு எடுத்துக் கொள்ளமாட்டார். குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிடுவார். அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை நாங்கள் புறக்கணிப்பதாக முறையிடுவார்கள் எனக் கூறிய பொழுது, மூவரும் சிரித்துக் கொண்டனர். இதற்குப் பதில் அளித்த பிரபாகரன் குறித்த பத்திரிகையின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தவுடனும்,ரணிலுடனும் அடிக்கடி விருந்து உண்டு வருவதாகவும், இது தொடர்பில் தாங்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், இதை விட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கம் வகிப்பதாகவும், பொட்டம்மான் ஏற்கனவே இவர்கள் தொடர்பில் ஒரு குற்றப் பத்திரிகையை தயார் செய்துவிட்டதாகவும் கூறி பிரபாகரனும் சிரித்துக்கொண்டார்.

இவ்வாறு மனம் விட்டு பேசுகின்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிதாக இருந்தமையால் தங்களிற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தும் நோக்கில் இரவு நேர விருந்து உண்ணும் வரைக்கும் மூவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் சூசையிடம் இருந்து பிரபாகரனிற்கு அவசரமான தகவல் ஒன்று கிடைக்கப் பெறுகிறது. அந்தத் தகவல் என்னவென்றால் பருத்தித்துறைக் கடலில் தரித்து நின்ற மாக் கப்பல் ஒன்றுமீது தங்களது அணியினர் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி அந்தக் கப்பலை பருத்தித்துறை துறைமுகத்தில் மூழ்கடித்து விட்டதாக தகவல் பரிமாறப்பட்டது. இதனை அடுத்து பிரபாகரனின் முகம் மாற்றமடைந்தது. ஏற்கனவே சூசை பிரபாகரனிடம் கடற்படையினரது ஆயுத வழங்கல் அணிமீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் அதற்குரிய திட்டங்கள் தொடர்பிலும் விளக்கிக் கூறியிருந்தார். முல்லைத்தீவு கடலுக்கும் நாகர்கோவில் கடலுக்கும் இடைப்பட்ட தூரத்தில் கடற்படையின் வழங்கல் அணிகளை வழிமறித்து தாக்குவதன் ஊடாக யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினரிற்குரிய விநியோக மார்க்கங்களை மட்டுப்படுத்துவது என, முடிவு எடுக்கப்பட்டு அதற்குரிய திட்டங்களும் தீட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பருத்தித்துறை துறைமுகத்திற்குள் ஊடுருவி மாக்கப்பல் மீது தாக்குதல் நடத்தியமையானது கடற்படையினர் உசார் அடைவதற்கு வழிவகுக்கும்@ கடற்படையின் விநியோக மார்க்கம் மீது தாக்குதல் நடத்துவது கேள்விக்குறியாகும் என உணர்ந்த பிரபாகரனிற்கு மாக்கப்பல் மீதான தாக்குதல் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. உடனடியாக சூசையிடம் ஏன் அவசரப்பட்டு தாக்குதல் நடத்தினீர்கள்? என பிரபாகரன் கேட்டார். துறைமுகத்தில் ஆயுத விநியோக நடவடிக்கையில் குறித்த கப்பல் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே அதே கப்பலில் படையினரிற்கு மாவும் இறக்கப்பட்டது. அப்பொழுதே தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்பாராத விதமாக, படையினரின் விநியோக மார்க்கத்துடன் சண்டை பிடித்துக்கொண்டு சென்ற அணி பருத்தித்துறை துறைமுகத்தையும் தாண்டி சண்டையில் ஈடுபட்ட போது, சண்டை காங்கேசன் துறை வரை நீண்டு செல்ல நேர்ந்தமையால் திசை திருப்பும் நோக்குடனேயே இத்தாக்குதலை பருத்தித்துறையில் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டது என தமது பக்க நியாயங்களை சூசை பிரபாகரனிற்கு விளக்கினார்.

இதனை அடுத்து சூசையுடனான தொடர்புகளை துண்டித்த பிரபாகரன் பருத்தித்துறை துறைமுகம் மீதான தாக்குதல் தொடர்பில் தமிழன்பனிற்கும், இறைவனிற்கும் எடுத்துக் கூறினார். இதன்பின் விருந்துண்ணலை நிறைவு செய்த தமிழன்பனும், இறைவனும் பிரபாகரனிடம் விடைபெற்றுக்கொண்டு தமது புலிகளின் குரல் நிறுவன பணிமனை நோக்கி புறப்படத் தயாராகினர். இவர்களது செயற்பாடுகளில் இனி கூடுதலான உத்வேகம் இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் பிரபாகரன் இவர்களை வழியனுப்பி வைத்தார். பிரபாகரனிடம் விடைபெற்றுச் செல்லும் இவர்கள் தங்களது ஊடகத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு வழிகோலினார்களா? அல்லது அழிவிற்கு வழிகோலினார்களா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.….

(வே. அர்ச்சுணன்)

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல