திங்கள், 18 பிப்ரவரி, 2013

நாய் வாலை நிமிர்த்துங்கள் – புலம்பெயர் மண்ணில் மாவையின் வேண்கோள்

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒரு கருத்தரங்கில் பேசும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.

சுவிஸிலில் சிவராம் ஞாபகார்த்த மன்றம் அக்கருத்தரங்கை நடத்தியது. அந்த சிவராம் ஞாபகார்த்த மன்றத்தை யார் நடத்துகிறார்களோ எனக்கு தெரியாது. அந்த அடிமுடியை நான் தேடுவது கிடையாது. சிவராமின் பெயரில் நடத்தப்படுவதால் அக்கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன்.

அக்கருத்தரங்கில் பேசிய மாவை சேனாதிராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் சிவராமின் பங்கு பற்றி நினைவு கூர்ந்ததுடன் ஆரம்பகாலத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் அதற்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் தான் பங்குபற்றியதையும் நினைவு கூர்ந்தார். அந்த முயற்சியில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களில் சிலர் (சுவிஸில்) இருப்பதையும் சுட்டிக்காட்டி அதே போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களிடத்திலும் ஒரு கூட்டமைப்பு உருவாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தாயகத்தில் பல தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்ற இலக்கை நோக்கி ஒரே அணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனவோ அது போல பொது இலக்கை நோக்கி நகர்வதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஒரு கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்றும், அதற்கு சுவிஸில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மாவை சேனாதிராசா நல்ல நோக்கத்தோடு இதை சொல்லியிருந்தார் என்பதை மறுப்பதற்கு இல்லை. தமிழ் மக்களின் விடுதலை என்ற பொது இலக்கை நோக்கி நகர்வதற்கு இது அவசியம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது நாய் வாலை நிமிர்த்துகின்ற வேலை என்பது ஒரு புறமிருக்க தமிழ் மக்களின் விடுதலை என்ற பொது இலக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புக்களிடம் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அதற்கு அப்பால் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை இருக்கிறதா அல்லது பொது எதிரியின் அடக்குமுறையை இனஅழிப்பை சர்வதேச மட்டத்தில் பகிரங்கப்படுத்தி சர்வதேசத்தின் முன் குற்றவாளிகளை அம்பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என்று தம்மை அழைத்து கொள்பவர்கள் யார், அவர்களிடம் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் விடுதலை என்ற இலக்கு இருக்கிறதா அந்த தாயகத்தில் இருக்கும் மக்களின் நலன்களில் அக்கறை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

இவைகளை பார்த்த பின்னர் தான் இந்த நாய் வால்களை நிமிர்துவது ஏதாவது பிரயோசனமா என்பதை ஆராய முடியும்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் யார்?

விடுதலைப்புலிகள் தாயகத்தில் ஆயுதப்போராட்டத்தை நடத்தி வடக்கு கிழக்கில் குறிப்பிட்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் இரு தரப்பினர் தான் இயங்கி வந்தனர். அதில் ஒரு தரப்பு சிறிலங்கா அரசுக்கு சார்பான புளொட், ஈ.பி.டி.பி போன்ற இராணுவ ஒட்டுக்கள், இவர்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் ஆதரவு கிடையாது. சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் ஒரு சிறிய குழுவாக இயங்கியவர்கள். இவர்களை புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் என்ற வகைக்குள் அடக்குவதும் பொருத்தமற்றதாகும்.

இரண்டாவது தரப்பு விடுதலைப்புலிகளின் வெளிநாடுகளில் உள்ள கிளைகளும் அதற்கு ஆதரவான அமைப்புக்களும், இவர்கள் அனைவரும் 2009மே வரைக்கும் ஒன்றாக இயக்கியவர்கள். வன்னி தலைமையகத்தின் கட்டளைகளுக்கு இணங்க செயற்பட்டவர்கள். இவர்களுக்கு தான் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவும் இருந்தது.

சுவிஸ் போன்ற நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, போன்ற பெயர்களில் இயங்கி வந்தன. விடுதலைப்புலிகள் அமைப்பின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அல்லது மறமுகமான கட்டுப்பாட்டின் கீழ் சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழர் பேரவை, பிரித்தானியா தமிழர் பேரவை என இயங்கி வந்தன. இவை அனைத்துமே வன்னி கட்டளையின் கீழ் ஒரே குடையின் கீழ் செயற்பட்டு வந்தன.

ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின் வன்னியில் விடுதலைப்புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களில் பல்வேறு பிரிவுகள் உருவாகின.

அவற்றில் முக்கியமானவை நெடியவன் தலைமையில் இயங்கும் குழு, மற்றையது உருத்திரகுமார் தலைமையில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகும். இது தவிர உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, தலைமை செயலகம், தமிழர் நடுவகம் என பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.

2009ஆம் மே மாதத்திற்கு முன்னார் ஒன்றாக இயங்கிய இவர்கள் இப்போது கீரியும் பாம்பும் போலவே செயற்படுகிறார்கள். இவர்களின் முழுக்கவனமும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி சேறு பூசி நாறடிப்பது தான். இவர்களின் முழுக்கவனமும் சொத்துகளை அபகரித்து கொள்வதும், ஒருவருக்கு ஒருவர் துரோகி பட்டங்களை வழங்குவதும் தான்.

தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ அல்லது அங்கு அவர்களுக்கு ஏற்படும் இராணுவ அடக்குமுறைகள், காணி அபகரிப்புக்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. தாயகத்தில் என்ன நடக்கிறது என்று அறியாது கற்பனை உலகில் ஒருவருக்கு ஒருவர் துரோகி பட்டங்களை வழங்குவதில் தான் அவர்களின் கவனம் எல்லாம் இருக்கிறது.

நெடியவன் குழுவை பொறுத்தவரை தாயகத்தில் தமிழ் மக்கள் தற்போது அடக்குமுறைக்குள் வைத்திருக்கப்படுவது பற்றியோ அந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவோ அல்லது தமிழர் தாயகப்பகுதி திட்டமிட்ட ரீதியில் அபகரிக்கப்படுவது பற்றிய அக்கறை இருப்பதாக தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரை மீண்டும் பிரபாகரன் வருவார், 5ஆம் கட்ட ஆயுதப்போராட்டம் நடக்கும். அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே அவர்களின் வாதம். அவர்களுடன் ஒத்தவர்களாக அவர்களின் நெறிப்படுத்தலில் தான் தமிழ் நாட்டில் உள்ள நெடுமாறன் போன்றவர்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் நெடியவன் குழு சிறிலங்கா அரசுக்கு சாதகமாகவே செயற்படுகின்றனர். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது, விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் பிரசாரத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே நெடியவன் குழுவின் மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்ற பேச்சு அமைந்திருக்கிறது.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என சர்வதேச மட்டத்தில் சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கின்ற இவ்வேளையில் மகிந்த ராசபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசுக்கு கைகொடுத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள நெடியவன் குழுவும் தமிழகத்தில் உள்ள நெடுமாறன் போன்றவர்களும் தான்.

நெடியவன் குழுவை பொறுத்தவரை தமிழ் மக்களின் பொது எதிரியான சிறிலங்கா அரசை விட உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசுதான் முதலாவது எதிரியாக காணப்படுகின்றனர். உருத்திரகுமாரனுக்கும் அவர்களுடன் சேர்ந்திருப்பவர்களுக்கும் துரோகி பட்டங்களை வழங்குவதில் தான் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் கண்ணியமானவர்களும் கல்விமான்களும் இருப்பது உண்மை. ஆனாலும் அவர்கள் ஏன் தாயக மக்கள் இப்போது அனுபவிக்கும் அடக்குமுறைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவர தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை. அது பற்றி அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினருக்கும் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்கள் இராணுவ நெருக்கடிக்குள் இருப்பது பற்றியும் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் பற்றியும், அல்லது காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள், வடக்கு கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்படுகின்ற அவலம் எவையும் கண்ணில் தெரிவதில்லை.

உதாரணமாக மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார், பொத்துவிலில் நான்கு பெண்கள் சிங்களவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அக்கால பகுதியில் தான் புதுடில்லியில் யாரோ ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தாயகத்தில் தமது இனத்தை சேர்ந்த தமது உறவை சேர்ந்த 4வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அல்லது பொத்துவிலில் நான்கு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பற்றி எதுவும் பேசாத நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புதுடில்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்திருந்தது. புதுடில்லியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதற்கு முதல் மண்டைதீவிலும் பொத்துவிலிலும் உங்கள் உறவுகளுக்கு நடந்த கொடுமை பற்றி ஒரு சிறிய கண்டன அறிக்கையை கூட ஏன் நாடு கடந்த தமிழீழ அரசினால் வெளியிட முடியாமல் போனது.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவிற்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருந்தாலும் ஏன் அவர்கள் தாயகத்தில் நடக்கும் இது போன்ற சம்பவங்களில் கூடிய கவனம் செலுத்த தவறுகிறார்கள் என்பது தெரியவில்லை.

அது தவிர வன்னியில் உள்ள தமிழ் கிராமங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் கூட வவுனியா கொக்கச்சான்குளத்தில் 700சிங்கள குடும்பங்களை கொண்டுவந்து நாமல் ராசபக்ச குடியேற்றியிருந்தார். இது போன்று வன்னியில் பல இடங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன

இரா.துரைரத்தினம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல