தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விநாயகம் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் போலி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டபோது தாய்லாந்து நாட்டின் பத்தையா நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தலைமையின் உத்தரவுக்கு அமைய பிரித்தானியாவில் இருந்து தாய்லாந்து சென்று பெருந்தொகை ரொக்கப் பணத்தை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புகின்ற முன்னெடுப்புக்களில் ஈடுபட்டபோது கையும்மெய்யுமாக பிடிபட்டுக் கொண்டனர்.
வங்கியின் கண்காணிப்புக் கமரா மூலம் இவர்களின் மோசடி அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இருவரும் பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றவர்கள். ஒருவரின் பெயர் தேவராஜா ஞானராஜா. மற்றவரின் பெயர் நாராயணசாமி மோகன். இவர்கள் முறையே பொலிகண்டி, கிளிநொச்சி ஆகிய இடங்களைச் சேர்ந்தவ்ர்கள்.
இவர்களின் உடைமையில் இருந்து 134 போலி வங்கி அட்டைகள், ஏராளமானோரின் வங்கிக் கணக்குகள், மடிக் கணனி, மின்னணு சாதன உபகரணங்கள், ரொக்கப் பணம் போன்றன கைப்பற்றப்பட்டன.
இவை பொலிஸாரை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியமையுடன் உஷார்ப்படுத்தியும் உள்ளன.
இதற்கு முன்னரும் விநாயகம் குழுவினர் இது போன்று வங்கி அட்டை மோசடி, கடனட்டை மோசடி, காசோலை மோசடி என்று ஏராளமான தில்லுமுல்லுகளை தாய்லாந்தில் மேற்கொண்டு உள்ளனர்.
குறிப்பாக கனடாவில் இருந்து தாய்லாந்தில் இருந்து அங்கிருந்து பிரான்ஸிற்கு 52 கோடி ரூபாயை விநாயகத்தின் விசுவாசிகள் அனுப்பி இருக்கின்றனர் என்று தாய்லாந்தில் உள்ள தாய்நாடு நிருபர் தெரிவித்தார்.
தாய்நாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக