சனி, 9 மார்ச், 2013

அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!

இதுதான் பிரபாகரன் வீடு!” ”இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!” ”இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!” – இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், ‘காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?� என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது.


கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது…

”2009 ஜனவரியிலிருந்து ஒரு நாள், ஒரு மணி நேர இடைவெளிகூட இல்லாமல் ஷெல்லடி நடந்தது. ஒரு சின்ன இடைவெளியைக் கொடுத்தால்கூட, புலிகள் சுதாரித்துக் கொள்வார்கள் என்று எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே வந்தது இராணுவம்.

மழையாகப் பொழிந்த ஷெல்களுக்கு நடுவே கிடைத்த சின்னச் சின்ன இடைவெளிகளுக்கு மத்தியில் அங்குலம் அங்குலமாக நாங்கள் நகர்ந்தோம்.

தர்மபுரம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்லும் வழியெல்லாம் ஷெல்லடியில் மக்கள் செத்து விழுந்தார்கள். பல தாய்மார்கள் தங்களின் இறந்த குழந்தைகளை அங்கேயே புதைத்துவிட்டுக் கடந்தார்கள். முதிர்ந்தவர்களை அப்படியே கைவிட்டுச் சென்றார்கள்.

கரையா முள்ளிவாய்க்கால், வெள்ளா முள்ளிவாய்க்கால், கப்பல் ரோட், வட்டுவாகலை அண்டிய பிரதேசங்களில் மே மாதம் 11-ம் தேதி தொடங்கி நடந்தது இரத்த அழிவுதான். நாங்கள் நகர்ந்த இடங்களில் இருந்த மரங்களில்கூடச் சிதைந்த உடல்கள் தொங்கின.

விஷக் குண்டுகள் விழுந்த இடத்தில் அது ஆக்சிஜனை இல்லாமல் செய்ய, மூச்சுத் திணறி இறந்தவர்கள் பலர். அந்தக் குண்டு வீசப்பட்ட இடங்களைச் சுற்றிப் பல மைல்களுக்கு அதனுடைய பாதிப்பு பயங்கரமாக இருக்கும். தொண்டை எல்லாம் வறண்டுபோகும்.

காயம் அடைந்து சிகிச்சை கிடைக்காமல், இரத்தமிழந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாகிறோம் என்று தெரிந்தே இறந்தவர்களின் நிலைதான் மிகவும் கொடூரம். இதையெல்லாம் பார்த்த புலிகள் கையறு நிலையில் மக்களை அவர்கள் வழியில் செல்லுமாறு அனுப்பினார்கள்.

ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற மக்களும் கொல்லப்பட்டார்கள். எங்கும் செல்ல முடியா மல் மக்கள் அந்தச் சிறிய பகுதிக்குள் சிக்கி மடிந்தார்கள். மே 15-ம் தேதி எங்களின் முடிவு நெருங்கியிருந்தது.

எங்களைக் காப்பாற்ற இந்தியா வருகிறது, அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத் தளபதி வரப்போகிறார். ஐ.நா-வின் மேற்பார்வையில் புலிகள் சரணடைவார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் என்ற பேச்சு மக்களிடம் பரவி ஒரு நம்பிக்கையாக விரிந்து இருந்தது.

புலிகளுக்கு அந்த வாக்குறுதி இந்தியா சார்பிலும், மேற்குலகத்தின் சார்பிலும் வழங்கப்பட்டிருந்தது.

எழிலன் என்னிடம் வந்து, ‘நீ பிள்ளைகளை அழைச்சுக்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய் சரண்டர் பண்ணு. நான் வர்றேன்� என்றார்.

போர் அநேகமாக முடிவுக்கு வந்திருந்தது. தூரத்தில் ஒலிக்கும் வெடிச் சத்தங்களைத் தவிர, எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஆயுதங்கள் யாவும் புலிகளால் அமைதியாக்கப்பட்டன.

நானும் என்னோட மகள்களும் பிற சனங்களும் வட்டுவாகல் வழியாக வெளியேறி 17-ம் தேதி இரவு செல்வபுரம் வந்தோம். அங்கே ஒரு மரத்தடியில் ஏராளமான சனங்கள் அமர்ந்திருந்தனர்.

புலிகளின் பிரதான தளபதிகள் பலர் குடும்பம் குடும்பமாக அவர்களுடன் இருந்தார்கள்.

அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடும், தளபதி இளம்பரிதி மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடும், மஜீத் என்ற தளபதி இரண்டு குழந்தைகள் மற்றும் தளபதியோடும், பிரியன் அவருடைய மனைவி குழந்தைகளோடும், மனைவியை ஏற்கெனவே இழந்த ராயா அவரது குழந்தைகளோடும் அமர்ந்திருந்தனர்.

இதுபோல எண்ணற்ற போராளிக் குடும்பங்களைக் கண்டதும் என் கணவர் எழிலனை அழைத்து வரலாம் எனத் திரும்பியபோது, சில பொடியள் வந்து ‘நாங்கள் அழைத்து வருகிறோம் அக்கா� என்று சொல்லி அழைத்து வந்தார்கள். மிகவும் சோர்ந்து போய் வந்த எழிலன் என்னோடு எதுவும் பேசவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.

பின்னர், ‘நாங்க தாயகத்துக்காகப் போராட வெளிக்கிட்டு பூஜ்ஜியம்கூட இல்லை. மைனஸில் வந்து நிக்கிறோம்� என்றபடி மீண்டும் தலை குனிந்து கொண்டார். சமாதானக் காலத்தில் சரிக்குச் சமமாக இராணுவத்தோடு நின்ற தலைவர்கள் எல்லாம் பிணையக்கைதிகளாகி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.

அந்த இரவை அப்படியே கழித்தோம்!” என்று நிறுத்திக்கொண்டு அந்த நினைவுகளில் மூழ்கியவர் சின்ன இடை வேளைக்குப் பிறகு தொடர்ந்தார்.

புலிகளின் மூத்த தலைவர்களான புதுவை இரத்தினதுரை, பாலகுமார், பேபி எனப்படும் இளங்குமரன், யோகரத்தினம் எனப்படும் யோகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களோடு பிரான்சிஸ் ஜோசப் என்ற அடிகளாரும் அங்கேதான் இருந்தார்.

பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உண்மையிலேயே ஒரு தியாகியைப் போல வன்னி மக்களுக்காக வாழ்ந்தார். எமது பிள்ளைகளின் கல்வியறிவுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.

தோல்வியைத் தழுவுகிறோம் என்று தெரிந்தபோது புலிகள் அவரைப் பத்திரமாக படகில் அனுப்பி வைக்க முடிவெடுத்த போதுகூட, மக்களை விட்டு விலகிச் செல்ல மறுத்து, பிடிவாதமாக மக்களோடு நின்றார்.

அந்த இரவில் அவரும் எங்களோடு நின்றார். அவருக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகள் தெரியும் என்பதால், இராணுவத்துடனான தொடர்பாடலுக்கு அவர் பெரிதும் பயன்பட்டார்.

மே 18-ம் தேதி காலை சுமார் 7.30 மணி இருக்கும்போது இராணுவத்தினர் வந்து, ‘நீங்கள் புலிகள் அமைப்பில் ஒரு நாள் உறுப்பினராக இருந்தால்கூட எங்களிடம் வந்து சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு ஐ.நா. மூலம் பொது மன்னிப்பு வழங்கப்படும்� என்று அறிவித்தார்கள்.

ஜோசப் அடிகளாரும், ‘நாம் சரணடைவோம். ஐ.நா. நம்மை விடுவிக்கும்!� என்றார். பேருந்துகளைக் கொண்டுவந்து நிறுத்தி, அதில் போராளிகளை ஏற்றினார்கள். எல்லோரையும் ஏற்றிவிட்டு அருட்தந்தையும் அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டார்.

என் மகளின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். அன்று சரணடைந்த எந்த ஒரு போராளியையும் அதன் பிறகு யாரும் எங்கும் உயிரோடு பார்க்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து, நான்கு வருடங்களாகிவிட்டன. போர் முடிந்த பிறகு, 17,500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்து இருப்பதாக முதலில் சொன்னது அரசு.

பின்னர் 15,000 என்றது. இப்படிக் குறைந்து குறைந்து இறுதியில் 11,000 போராளிகளின் பெயர் விவரங்களை வெளியிட்டது அரசு.

அதில் நான் செல்வபுரத்தில் கண்ட எந்தப் போராளிகளின் பெயர்களும் இல்லை. அவர்களின் குடும்பங்களின் விவரமும் இல்லை.

அருட்தந்தையின் பெயரும் இல்லை. என் கணவரின் பெயரும் இல்லை.

அப்படிஎனில் போருக்குப் பின்னர் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது?

இதை நான் யாரிடம் கேட்பேன்?”- தீர்க்கமான குரலில் கேட்கிறார் ஆனந்தி எழிலன்.

ஆனந்த விகடன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல