சனி, 9 மார்ச், 2013

"மூக்குப் பேணி" எங்கே?

வடக்கு மக்களின் அன்றாட பாவனையிலிருந்து ஓரம் கட்டப்பட்டு இன்று காட்சிப் பொருளாகியுள்ள பொருள் இது. வடக்கு மக்களின் நாளாந்த பாவனையில் இருந்து வழக்கொழிந்து போன பொருட்களில் ஒன்றுதான் ‘மூக்குப்பேணி’. வடக்கு மக்களின் வீடுகளில் இந்த ‘மூக்குப்பேணி’ சரளமான பாவனையில் இருந்தது. தேனீர் தண்ணீர், மோர், உள்ளிட்ட நீராகாரங்களை பருகுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த மூக்குப்பேணியை வடக்கு தமிழர்களின் தனித்துவமான பண்டபாத்திர வகைகளுள் தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உள்ளடக்கியுள்ளனர்.

முன்னொரு காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்று உபசரிக்கும் போது அவர்களுக்கு நீராகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு இந்த மூக்குப் பேணிகள் பயன்பாட்டில் இருந்தன. இற்றைக்கு பல பத்து வருடங்களுக்கு முன்னர் பிற பிரதேசங்களில் இருந்து வடக்கு மக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் பலர் இன்று முதியவர்களாகியிருப்பர். இவர்களிடம் “வடக்கில் நீங்கள் பெற்ற அனுபவத்தை கூறுங்கள்?” என்று கேட்டால் முதலில் கூறுவது மூக்குப்பேணியில் தேத்தண்ணி குடித்த நினைவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு வடக்கு மக்களின் வரவேற்பு உபசார கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது இந்த மூக்குப்பேணி. அப்படி என்னதான் இந்த மூக்குப்பேணியில் இருக்கிறது என்று இப்போது கேள்வி எழக் கூடும்.

ஆம் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்காலத்தில் நாம் வீட்டுக்கு வரும் விருந்தாளி ஒருவரை எவ்வாறு வரவேற்கிறோம். விருந்தாளியை வாருங்கள் அமருங்கள் என்று கூறிவிட்டு அவரின் தாகத்தை தணிக்க தேனீர், பழச்சாறு, குளிர்பானம் போன்ற ஏதேனும் ஒரு நீராகாரத்தை பருக கொடுப்பது தானே வழமை.

இவ்வாறு வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு நீராகாரத்தை பரிமாற நாம் இப்போது‘கப்பன் சோஸர்’ அல்லது கண்ணாடி குவளை, மாபிள் கோப்பைகள் என்பவற்றை தானே பயன்படுத்துகிறோம்.

ஆனால் முற்காலத்து தமிழர்கள் இவ்வாறான வரவேற்பு உபசாரத்துக்கு பயன்படுத்தியது மூக்குப்பேணியைதான். இந்த மூக்குப் பேணிகள் நாம் இப்போது நீராகாரத்தை பருக பயன்படுத்தும் குவளைகளை விட சிறப்பான பல அம்சங்களை கொண்டிருந்தன.

வாய்ச் சுகாதாரத்தை பேணுவதற்குரிய சிறந்த ஒரு உபாயமாக இந்த மூக்குப் பேணிகள் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தன. இது தவிர நீராகாரத்தை சிந்தாமல் சிதறாமல் பருகவும் இவை அக்காலத்தவர்களுக்கு பேருதவியாய் இருந்தன.

ஒருவர் சூடான தேனீரை பருகும் போது அதன் சூட்டை, பருகும் நபர் பருகி முடிக்கும் வரை பேணவும் குளிரான பானத்தைப் பருகும் போது அதன் தன்மையை பேணவும் இந்த மூக்குப் பேணிகளில் வலிமை இருந்தது.

மூக்குப்பேணியின் வடிவமைப்பு இவற்றுக்கு எல்லாம் ஏற்றவகையில் அமைந்திருந்தமை தான் இவை சிறப்புப் பெறுவதற்கு காரணமாக இருந்தன.

இந்த மூக்குப் பேணியின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று பார்த்தால், அதன் பிரதான பகுதி நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எவர் சில்வர் (டம்ளர்) குவளை போன்ற அமைப்பும் அதன் நுனியில் பீலி போன்ற அமைப்புக் கொண்ட மூக்கு ஒன்றும் காணப்படும். இந்த மூக்கு பிரதான பகுதியின் பொருந்தியிருக்கும் பகுதியில் இருந்து நுனி நோக்கி செல்ல செல்ல மெது மெதுவாக சிறிதாகிக் கொண்டு போகும். ஆனால் மூக்கின் நுனிப் பகுதி துல்லியமான கூராக அமையாது சற்று விரிவடைந்து காணப்படும்.

இந்த அமைப்பு, மூக்குப் பேணியின் பிரதான பகுதியில் நிரம்பியுள்ள நீராகாரத்தை மனிதன் சிந்தாமல் சிதறாமல் தனது வாயினுள் ஊற்றி பருகிக் கொள்ள உதவியாக இருக்கிறது.

சரி இது எப்படி? வாய்ச்சுகாதாரத்தை பேணுவதற்கு உபாயமாக இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.

ஆம் வாய்ச் சுகாதாரத்தை பேணுவதற்கான உபாயமும், ஒரு மனிதனின் நீர் ஆகாரத்தை உட்கொள்ளும் போது அவனது கழுத்துப்பகுதி, உடலமைப்பு எவ்வாறு இருப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என்ற முறைகளை கடைப்பிடித்தலை வலியுறுத்தும் வகையில்தான் இந்த மூக்குப் பேணிகள் இருந்தன.

சாதாரணமாக ஒரு உணவகத்திலோ அல்லது நண்பர்கள் உறவினர் வீடுகளிலோ பொது நிகழ்வுகளிலோ எமக்கு நீராகாரம் வழங்கப்படும் போது குவளையில் வாய்வைத்து ரசித்து ருசித்து அதனை பருகுவது தானே நமது வழமை.

நமக்கு முன்னர் அதே குவளையில் வாய் வைத்து பருகியவர் குறித்து நாம் எண்ணிப்பார்ப்பதே இல்லை. நமக்கு முன்னர் பருகியவர் வாய் சம்பந்தப்பட்ட நோய் அல்லது மலேரியா, கசம், உள்ளிட்ட தொற்று நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தால் நம்மையும் அதே நோய் பீடித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சரி ஒருவர் பருகிய குவளையில் இன்னொருவருக்கு நீராகாரம் கொடுக்க முதல் கழுவப்படுகிறது தானே என எண்ணினாலும், சில கிருமிகள் சாதாரணமாக நீரில் கழுவுவதால் நீங்கி விடுபவையோ அல்லது இறந்து விடுபவையோ அல்ல.

இதனை கருத்தில் கொண்டுதான் இப்போது பொது வைபவங்களில் “யூஸ் அன்ட் துறோ” குவளைகளை பயன்படுத்தும் கலாசாரம் கூட உருவாகியுள்ளது.

ஆனால் முற்கால வடக்கு தமிழர்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மூக்குப்பேணிகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஏனெனில் மூக்குப்பேணி ஒருவர் தனது வாயை சரிவர பேணியில் பொருத்தி நீராகாரத்தை பருகும் வசதியை கொண்டிருக்கவில்லை. மூக்குப்பகுதியில் வாய்வைத்து நீராகாரத்தை பருகினால் அவ்வளவுதான் நீராகாரம் முழுதும் நமது உடலில் சிந்திவிடும் இதனால் மூக்குப் பேணியில் பரிமாறப்படும் நீராகாரத்தை பருகுபவர் அதனை அண்ணாந்தே பருக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

மூக்கு தவிர்ந்த ஏனைய பகுதியில் வாய்வைத்து பருகலாமே என்று பார்த்தால் பாத்திரத்தை கையால் பிடிப்பதற்கு வழி இல்லாமல் போகும்.

எனவே மூக்குப் பேணியை பயன்படுத்தி நீராகாரம் பருகும் ஒருவர் வேறு வழியின்றி பேணியின் பிரதான உடற்பகுதியை கையால் பற்றிப் பிடித்து அதன் மூக்குப் போன்ற பகுதியினூடாக நீராகாரத்தை அண்ணாந்துதான் பருக வேண்டும். வாய்வைத்து பருக எடுக்கும் முயற்சிகள் பருகுபவரை அசெளகரியத்தில் தள்ளிவிடும்.

எனயை பயன்படுத்துபவர்கள் அண்ணாந்தே நீராகாரத்தை பருகுவதால் உமிழ் நீர் வழியாக பரவக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கின்றது.வே மூக்குப் பேணி

அத்துடன் அண்ணாந்து பருகும் போது உடலையும் கழுத்தையும் நேராக நிமிர்த்தி நீராகாரத்தை உள் செலுத்துவதனால் நீராகாரம் தங்குதடையின்றி முறைப்படி பருகப்படுவதுடன் புரையேறுதல், வெளியே சிந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றது.

இதன்மூலம் நீராகாரத்தை பருகும் போது உடலமைப்பை வைத்திருக்க வேண்டிய முறையும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட மூக்குப் பேணி எவ்வாறு குளிரான ஆகாரத்துக்காக குளிரையும் வெப்பமான அல்லது சூடான ஆகாரத்துக்காக சூட்டையும் பேணுகிறது என்பன மற்றும் ஒரு கேள்வியாகும்.

இந்த மூக்குப் பேணிகள் செப்பு அல்லது பித்தளையினால் வடிவமைக்கப்படுகின்றமையால் இது சாத்தியப்படுகிறது. பித்தளை மற்றும் செப்பு ஆகியன குறைகடத்தியாக இருப்பதனால் வெப்பத்தையோ குளிரையோ மிகவும் மெது வாகவே கடத்துகின்றன. இதனால் நீராகாரத்தின் வெப்பமோ குளிரோ நீண்ட நேரம் பேணப்படுகின்றது.

இந்த செப்பு அல்லது பித்தளையினாலான மூக்குப்பேணியில் அமிலத் தன்மையான அல்லது புளிப்பு சுவை சேர்ந்த நீராகாரத்தை பருகும் பொது தாக்கங்கள் ஏற்பட்டு நீராகாரம் கெட்டுப் போகவோ அல்லது சுவை இழந்து போகவோ, மனிதனுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தவோ சாத்தியம் உண்டு. எனவே இதற்கான பரிகாரமும் மூக்குப் பேணியில் உண்டு.

அதாவது மூக்குப் பேணியின் உள்புறம் அதாவது நீராகாரத்தை ஏந்தும் பகுதியின் உட்பரப்பு அமிலப் பொருட்களுடன் தொடுகை மூலம் தாக்குதிறன் குறைந்த உலோகக்கலவை அல்லது முலாம் காவலியாக பூசப்பட்டிருக்கும் இதனால் அமிலத் தன்மையுள்ள நீராகாரங்களை பருகவும் வழிகிடைக்கிறது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களும் அடங்கிய மூக்குப்பேணி இன்று வடக்கு தமிழர்களின் பாவனையில் இருந்து வழக்கொழிந்து போயுள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளடங்கிய மூக்குப்பேணி இன்று பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்டு வடக்கு தமிழ் மக்களின் கலாசார பொருட்கள் என்ற அடிப்படையில் கண்காட்சிப் பொருளாகியுள்ளது. இவ்வாறு மூக்குப் பேணி பாவனையில் இருந்து ஓரம்கட்டப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நவீன கலாசாரம், அழகிய கண்கவரும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் சந்தையை நிரப்பிக் கொண்டமை, நவீன மேற்கத்தேய கலாசாரத்துக்குள் நம்மவர்கள் படிப்படியாக உள்Zர்க்கப்படுகின்றமை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இதனை விட தமிழர்களின் பாரம்பரிய பண்ட பாத்திரங்களை வடிவமைக்க அல்லது தயாரிக்க தெரிந்த கலைஞர்கள் அருகிப் போனமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

இந்த மூக்குப் பேணிகள் வழக்கத்திலிருந்து பூரணமாக ஓரம்கட்டப்பட்டு நீண்டகாலம் கூட இல்லை காரணம் 1989, 1990 களில் யாழ். குடாநாட்டிலும், வன்னியிலும் மூக்குப் பேணிகள் பாவனையில் இருந்தன.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடக்கு தமிழர்களின் பாவனையில் இருந்துவந்த இந்த மூக்குப்பேணி இன்று புழக்கத்தில் இல்லாது கண்ணாடிப் பெட்டிகளுக்குள் காட்சிப் பொருட்களாகியுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல