உங்களிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது போர்ட்டபிள் மீடியா பிளேயர் என ஏதாவது ஒன்றை வைத்திருந்தால், கொரில்லா கிளாஸ் என்னும் ஸ்கிரீனைக் கொண்டிருப்பீர்கள். இது என்ன பெயர்? கொரில்லா குரங்குக்கும், ஸ்கிரீன் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?
கொரில்லா கிளாஸ் என்ற ஒரு ஸ்கிரீன் வகையை கார்னிங் (Corning) நிறுவனம் வடிவமைத்துத் தருகிறது. இரசாயனக் கலவை மூலம் கிளாஸ் உறுதிப்படுத்தப்பட்டு, மெலிதாகவும், தடிமன் குறைவானதாகவும், பழுது அடையாத வகையிலும் உருவாக்கப்படுகிறது. இதனுடைய முக்கிய அம்சமே உறுதியாகவும், அதே சமயத்தில் தடிமன் குறைவாகவும் இருப்பதுதான். கார்னிங் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது உலகெங்கும், நூறு கோடி சாதனங்களுக்கு மேல் கொரில்லா கிளாஸ் பயன்படுத்துகின்றன.
இந்த ஆண்டு, கார்னிங், கொரில்லா கிளாஸ் வரிசையில் தன் மூன்றாவது மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. சென்ற ஆண்டு கருத்தரங்கில் காட்டப்பட்ட, கொரில்லா கிளாஸ் 2 முதலில் வந்ததைக் காட்டிலும் மெலிதாக இருந்தது. ஆனால் ஸ்கிராட்ச் பெறாமல் சமாளிக்க இயலவில்லை. தற்போது வர இருக்கும் கொரில்லா கிளாஸ் 3, இன்னும் மெலிதாக இருப்பதுடன், எந்த கீறலையும் ஏற்படுத்தாது.
இந்த தன்மையை ஆங்கிலத்தில் Native Damage Resistance (NDR) என அழைக்கின்றனர். இந்த கிளாஸ் உடைய வேண்டும் என்றால், வழக்கமான அழுத்தம் போல மூன்று மடங்கு கூடுதலாக அழுத்தம் தேவையாய் இருக்கும். இருப்பினும் நாம் யாரும் இதனை நம் மொபைல் போன்களில் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராய் இருக்க மாட்டோம். எதற்கும் ஸ்கிராட்ச் விழாமல் திரை இருக்க வேண்டும் என்றால், இதற்கென விற்பனை செய்யப்படும் ஸ்கிராட்ச் கார்ட் வாங்கிப் பயன்படுத்த வேண்டியதுதான்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக