லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரி இயங்கும் விதம் அறிய, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரு நல்ல வசதி தரப்பட்டுள்ளது. இதனைப் பலர் அறிந்திருப்பதில்லை என்பது வியப்புக்குரியது.
இந்த வசதியினைப் பயன் படுத்தி சோதனையை மேற்கொண்டால், லேப்டாப் கம்ப்யூட்டரில் மின்சக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். எப்படி இந்த மின்சக்தி செலவினை ட்யூன் செய்திடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்த முதலில் Windows > Search Box எனச் செல்லவும். பின்னர் சர்ச் பாக்ஸில் “cmd” என டைப் செய்திடவும்.
இங்கு உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து powercfg energy output \FilePath\Energy_Report.html என டைப் செய்திடவும்.
இதில் FilePath என்பது, நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட இருக்கும் எச்.டி. எம்.எல். ரிப்போர்ட் எங்கு சேவ் செய்யப்பட உள்ளது என்பதனைக் குறிப்பிட வேண்டிய இடமாகும்.
இந்த சோதனை நடத்தப்படுகையில், வேறு எந்த புரோகிராமும் இயக்கத்தில் இருக்கக் கூடாது. கிடைக்கும் ரிப்போர்ட்டில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் எப்படி, பேட்டரியின் மின்சக்தியினைச் செலவளிக்கிறது என்பதனையும், வேறு சில பரிந்துரைகளையும் தரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக