திங்கள், 18 மார்ச், 2013

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதால், தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது

இலங்கையிலிருந்து, தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்வதால், தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில, "லெட்டர் பேட்' கட்சியினரின், "அடாவடி' போராட்டங்களால், தமிழகத்தில், வெளிநாட்டினருக்கு பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.டில்லியிலிருந்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள, இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பிரசன்னா, குல்பர் சிங் ஆகியோர் தலைமையில், 17 ஆராய்ச்சி மாணவர்கள், நேற்று முன்தினம், தஞ்சாவூர் வந்தனர்.

இதில், நான்கு பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் இலங்கையைச் சேர்ந்த கனலேகா என்ற ஞானதரோ, 46. இவர், புத்த சாமியார்; மற்றவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.தஞ்சை பெரிய கோவிலை, நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இலங்கையைச் சேர்ந்த புத்த சாமியார், தஞ்சை கோவிலை சுற்றிப் பார்ப்பதாக தகவல் வெளியானதால், தமிழ்த் தேச பொதுவுடமை என்ற கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், வழக்கறிஞர் கரிகாலன், நாம் தமிழர் என்ற கட்சி நிர்வாகி தியாகு ஆகியோர் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சென்றனர்.

இலங்கையைச் சேர்ந்த கனலேகா மொட்டையடித்து காவி உடையில் இருந்ததால், அவரை அடையாளம் கண்ட இவர்கள், "சிங்களனே வெளியேறு' என, முழங்கியவாறு கனலேகாவை தாக்கினர். அவருடன் வந்தவர்கள் தடுத்து, அவரை, தொல்லியல் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து, நாம் தமிழர் என்ற கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் நல்லதுரை தலைமையில், தமிழ்த் தேச பொதுவுடமை என்ற கட்சி, விடுதலை தமிழ் புலிகள் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள், தொல்லியல் துறை அலுவலகம் முன், முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.இதையடுத்து, இலங்கை மாணவர் உள்ளிட்ட, 19 தொல்லியல் துறை ஆய்வு மாணவர்களும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருச்சி விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.அப்போது, கனலேகா மாற்று உடையில் அழைத்து வரப்பட்டார். வரும் வழியில், அவர்கள் வந்த வேன் மீது, ம.தி.மு.க., உள்ளிட்ட சில கட்சியினர், கல் வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் மிகவும் சிரமப்பட்டு, அவர்களை பாதுகாப்பாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து, சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கறிஞர் எங்கே?

இந்த சம்பவம் தொடர்பாக, "தமிழ்த் தேசிய பொதுவுடமை' என்ற, கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராஜமுனியாண்டி, தியாகு ஆகியோரை, தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்து, அவர்கள் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.இதில், நீல நிற சட்டை அணிந்த கரிகாலன் என்பவர் தான், கொடூரமான முறையில் கனலேகாவை தாக்கி உள்ளார். அவர் வழக்கறிஞராக தொழில் செய்கிறார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர் பின்னணி, மற்ற தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்தனர்.இந்த தாக்குதலுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த கனலேகா, புத்த மதத்தை தழுவியவர். புத்த மத்தைச் சேர்ந்த ஒருவர், எவ்வித ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக வந்தபோது, அவரை, நாம் தமிழர் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் தாக்கியுள்ளது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து, தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளை தாக்குவதும், அவர்களை தமிழகத்தை விட்டு வெளியேற வைப்பதும், சில மாதங்களாக தொடர் கதையாக நடந்து வருகிறது.

இலங்கையிலிருந்து ஒவ்வொரு மாதமும் சராசரியாக, திருச்சிக்கு மட்டும், 8,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள், வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோவில், ராமேஸ்வரம், தஞ்சாவூர், மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லவே வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன், இலங்கையிலிருந்து வந்த 80 சுற்றுலா பயணிகள், இதுபோன்ற கட்சியினரால் தாக்கப்பட்டு, அவர்கள், பாதியிலேயே தங்களின் சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினர்.

ஒரு மாதத்துக்கு முன், இலங்கை எம்.பி., ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதேபோல், ராஜபக்ஷேவின் மைத்துனர், ஓராண்டுக்கு முன் தமிழகம் வந்தபோது, இதுபோன்ற கட்சியினரால் தாக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.அதிருப்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த தமிழர் பிரச்னையை கையில் எடுத்து, இப்படி இலங்கையிலிருந்து சுற்றுலா வருபவர்களை தாக்குவது, எந்த விதத்தில் நியாயம் என,பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இதனால், இப்பகுதியில் சுற்றுலா தொடர்பான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:தமிழர்கள் பிரச்னையில் இலங்கையின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது; அதில் மாற்றுக்கருத்து இல்லை.
இலங்கையில் போர் நடந்தபோது, அந்த நேரத்தில் போரை நிறுத்த ஒருங்கிணைந்து போராடாமல், தற்போது விளம்பரத்துக்காக, தமிழகத்தில் சில, "லெட்டர் பேட்' கட்சியினர், இலங்கையிலிருந்து வருபவர்களை தாக்கி வருகின்றனர்.இலங்கையில் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை, "மனித உரிமை மீறல்' என்று கூறும் நாம், இது போன்ற செயலில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகத்துக்கு வரும் இலங்கை நாட்டினரை தாக்குவதால், உலக அரங்கில், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் தான் கெட்ட பெயர் கிடைக்கும். இங்கு நடக்கும் தாக்குதல்களால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கெடுதல் நேருமே ஒழிய, எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. வர்த்தகம், மற்ற தொழில்கள் இப்பகுதியில் பாதிக்கப்படும். புராதன சின்னங்களுக்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் தமிழர்கள் பலர், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டு, நாடு திரும்பும் நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்? இதே போல, இந்த நாடுகளுக்கு செல்லும் தமிழகப் பயணிகள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு என்ன செய்யப் போகிறது?தமிழகம் வரும் இலங்கை நாட்டினரை தொடர்ந்து தாக்குவதால், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறது. அந்த அவப்பெயரை போக்கும் வகையில், இனி வரும் காலங்களில் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், இது வரை இம்மாதிரி நடந்த சம்பவங்களில் மேற்கொண்ட சாதாரண நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்பதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன.இலங்கை நாட்டினர் மீது தாக்குதல் நடத்துபவர்களை, கடுமையான சட்டப் பிரிவுகளில் தண்டிக்க வேண்டும். அப்போது தான், தமிழகத்தில் வெளிநாட்டினர் தாக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், சர்வதேச பிரச்னையாக மாறாமல் இருக்கும்.

பெரிய கோவிலுக்கு அதிக பாதுகாப்பு அவசியம்

இலங்கையிலிருந்து சுற்றுலா வரும் அந்நாட்டினர், முதலில் வேளாங்கண்ணி, அடுத்ததாக, தஞ்சை பகுதி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுவும், பெரிய கோவில், அனைவரது கருத்தையும் கவரும்பொக்கிஷம். பெரிய கோவில், இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருந்தாலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய கோவிலுக்கு, மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இதில், மூன்றாவது நுழைவாயிலான ராஜராஜன் நுழைவாயிலில் தான், மெட்டல் டிடெக்டருடன், நான்கு போலீசார் இருப்பர். ஆயுதப்படை பெண் போலீசார் உள்ளனர். அதேபோல், கோவிலுக்கு செல்லும் பாதையில், நான்கு போலீசார் மட்டுமே உள்ளனர். கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்பு கிடையாது.போலீஸ் பாதுகாப்பில் உள்ள ஓட்டை காரணமாகத் தான், நேற்று முன்தினம், புத்த மதத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடந்துள்ளது என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், போராட்டக்காரர்களை அடையாளம் தெரியும் அனுபவம் கொண்ட போலீசாரை பாதுகாப்பில் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இக்கோவிலின் பாதுகாப்பு குறித்து, தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் டி.சத்தியமூர்த்தி கூறியதாவது:

தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் இம்மாதிரி புராதன சின்னங்களுக்கு, வட மாநிலங்களில் தொழில் துறை பாதுகாப்பு சிறப்பு படை போலீசார் பணியில் உள்ளனர். இவர்கள் எந்த சூழ்நிலையையும் கையாளத் தெரிந்தவர்கள். அதே போல் தமிழகத்திலும் அதிக பாதுகாப்பை உருவாக்கா விட்டால், அதிக அபாயம் தரும் சம்பவங்கள் ஏற்பட்டால், கையாள முடியாத நிலை ஏற்படும்.அது மட்டும் அல்ல... இம்மாதிரி ஆய்வாளர்கள் குழு வரும் போது, அதில், புத்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறிந்து தாக்குதல் நடத்துவது மோசமான செயலாகும்.

இலங்கையில் தமிழ் மற்றும் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட ஆய்வுகள் அடிக்கடி நடக்கும். அதில், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் பங்கேற்கும் போது, இதே மாதிரி அனுபவம் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

Dinamalar
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல