ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக செயற்பட்ட தயா மாஸ்ரர் நியமனம் பெறுகின்றார் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கயன் இராமநாதனுடன் அண்மைய நாட்களில் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது .
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இதில் முக்கிய பங்காளியாக தயா மாஸ்ரர் பங்கெடுத்து இருந்தார்.
எதிர்வரும் வட மாகாண தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராகவோ, அரசின் பிரசார பீரங்கியாகவோ இவர் களத்தில் இறக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக