அமீனா சச்சாலியா
மிகவும் சுவாரஸ்யமான காதல் கதையாக மாறியிருக்கக் கூடிய இந்த விஷயம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தனது முதல் மனைவி வின்னி மண்டேலாவுடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், இந்த இந்தியப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் நெல்சன். ஆனால் அந்தக் காதலை ஏற்க அவர் மறுத்து விட்டாராம்.
இதை அப்பெண்ணே தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அந்தக் கதை இதோ...
அந்த இந்தியப் பெண்ணின் பெயர் அமீனா சச்சாலியா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்கர் இவர். இவரது கணவர் யூசுப் சச்சாலியா. இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக இருந்தவர்.
சுயசரிதையில் சுவாரஸ்யம்
அமீனா 'When Hope and History Rhyme' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் நெல்சன் தன்னிடம் தனது காதலைச் சொன்னது குறித்து விவரித்துள்ளார்.
வின்னியுடனான திருமண பந்தம் முறிந்தபோது
மண்டேலாவின் முதல் மனைவி பெயர் வின்னி. இருவரும் 27 வருட காலம் தம்பதிகளாக இருந்தவர்கள். மண்டேலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் வின்னியுடனான திருமண பந்தம் முறிவடைந்தது. அப்போதுதான் அமீனாவை அணுகினார் மண்டேலா. அப்போது கணவரை இழந்திருந்தார் அமீனா.
மண்டேலா வீட்டுக்குப் போனபோது
மண்டேலாவின் வீட்டுக்குப் போனபோதுதான் அவர் தனது காதலை அமீனாவிடம் சொன்னாராம். அதை அமீனா விவரித்துள்ளார்.
அருகே அமர்ந்து முத்தமிட்டார்
நான் மண்டேலாவின் வீட்டுக்குப் போனபோது அவர் என்னருகே வந்து அமர்ந்தார். பின்னர் எனக்கு அன்போடு முத்தம் வைத்தார். எனது தலை முடியை கோதியபடி பேசினார்... உனக்குத் தெரியுமா, நீ எவ்வளவு அழகு என்று. மிகவும் அருமையான, கவர்ச்சியான இளம் பெண் நீ என்று பேசினார்.
கையைத் தட்டி விட்டேன்
உடனே நான் அவரது கையைத் தட்டிவிட்டேன். அவர் பயந்து விட்டார்.நான் தவறு செய்து விட்டேனா என்று வேகமாக கேட்டார். அதற்கு நான், என்னை இளம் பெண் என்று சொல்லாதீர்கள். நான் நடுத்தர வயதைத் தொட்டுவிட்ட பெண் என்றேன்.
சரி ஓல்டு லேடி...
இதையடுத்து சற்றே நிம்மதியடைந்த மண்டேலா, சரி இனி இளம் பெண் என்று அழைக்க மாட்டேன் ஓல்டு லேடி என்று சிரித்தபடி கூறினார். மறுபடியும் நான் கோபமாக முறைத்தேன். அவரிடம், நான் ஓல்டு லேடிஇல்லை, நடுத்தர வயதுப் பெண்தான் என்று கூறினேன்.
மீன் பொறித்து வைத்தேன்.. கோபத்தில் சாப்பிடவில்லை
அவர் என்னிடம் அன்பாக என்ன பேச வந்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. இதனால் அவருக்கு அதிருப்தி. ஒருமுறை அவர் என் வீட்டுக்கு வந்தார். நான் அவருக்குப் பிடித்த கிரே பிஷ் மீனைப் பொறித்து வைத்திருந்தேன். ஆனால் அவர் கோபத்தில் அதை சாப்பிட மறுத்து விட்டார்.
அன்று இரவு காதலைச் சொன்னார்...
அன்று இரவுதான் அவர் முதல் முறையாக தனது காதலை என்னிடம் தெளிவாகச் சொன்னார். எந்த நிபந்தனையும் இல்லாமல் உன்னை காதலிக்கிறேன் என்று பிளெய்னாக சொன்னார். ஆனால் நான் உடனடியாக அதை மறுத்து விட்டேன். மேலும், அவர் ஏற்கனவே மொசாம்பிக் நாட்டு அதிபரின் முன்னாள் மனைவி கிரேக்கா மெச்சலை மணந்திருப்பதையும் சுட்டிக் காட்டினேன்.
கிரேக்கா மட்டும் இல்லாவிட்டால்...
ஒரு வேளை கிரேக்கா மட்டும் இல்லாவிட்டால் மண்டேலாவை ஏற்றிருப்பேனோ என்னவோ. எனக்குத் தெரியவில்லை.
அப்செட்டாகி விட்டார் மண்டேலா
நான் கணவரை இழந்தவள். ஆனால் மண்டேலாவுக்கு மனைவி இருந்தார். எனவேதான் என்னால் அவரது காதலை ஏற்க முடியவில்லை. இதைக் கேட்டு அவர் அப்செட்டாகி விட்டார். அவரது உணர்வுகளை நான் புண்படுத்தியதாக உணர்ந்தேன். இதனால் அவரை சமாதானப்படுத்த முயன்றேன். மீன் சாப்பிடுமாறு பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டு கிளம்பிப் போய் விட்டார்.
ரொ்மான்ஸ் தெரியாதவர் மண்டேலா
மண்டேலாவுக்கு ரொமான்ஸ் சரியாக வரவில்லை. காரணம், அவர் சிறையில் இருந்த காலத்தில் அந்த கலையை அவர் இழந்திருந்தார். சிறையில் அவர் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் நல்ல ரொமான்டிக்கான நபராக அவர் திகழ்ந்திருப்பார். அதற்கு உதாரணம் - என்னிடம் கோபித்துக் கொண்டு போன அடுத்த நாள் அவர் என் முன் உட்கார்ந்து எழுதிய அழகான காதல் வரிகள்.
எனக்கு காதல் வரவில்லையே...
ஆனால் எனக்கு்ததான் மண்டேலா மீது காதல் வரவில்லை. நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் அவரை நேசித்தேன், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் யூசுப் மீது நான் கொண்டிருந்ததைப் போல மண்டேலாவிடம் எண்ண முடியவிலல்லை. எனக்கு வயதாகிப் போன பின்னரும் கூட மண்டேலா மீதுகாதல் வரவில்லை... என்று கூறியுள்ளார் அமீனா
83 வயதில் மறைவு
அமீனா கடந்த மாதம்தான் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 83. தனக்கும், மண்டேலாவுக்கும் இடையிலான நட்பு குறித்து தனது இரு பிள்ளைகளிடமும் ஏற்கனவே தெரிவித்திருந்தாராம் அமீனா.
94 வயதில் தள்ளாடி வரும் மண்டேலா
தற்போது 94 வயதாகும் மண்டேலா, பிரிட்டோரியா மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக