இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர்தான் புதியதாக காதல் வந்திருக்கிறது. இப்போது கணவரையும் குழந்தைகளையும் விட்டு பிரியமுடியாமல் காதலரையும் உடன் வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசிக்கிறார். அது எப்படி இரண்டு ஆண்களுடன் ஒரு பெண் ஒரே வீட்டில் வசிக்கமுடியும் என்று ஆச்சரியமாக கேட்கலாம். நல்ல புரிதல் இருந்தால் கண்டிப்பாக வசிக்கலாம் என்கிறார் அந்த பெண். லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர் மரியா பட்ஸ்கி. இவருக்கு பால் என்பவருடன் முறைப்படி திருமணமாகி, 9 மற்றும் 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. மரியாவிற்கு தற்போது 33 வயதாகிறது.
இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர்தான் புதியதாக காதல் வந்திருக்கிறது. இப்போது கணவரையும் குழந்தைகளையும் விட்டு பிரியமுடியாமல் காதலரையும் உடன் வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசிக்கிறார்.
அது எப்படி இரண்டு ஆண்களுடன் ஒரு பெண் ஒரே வீட்டில் வசிக்கமுடியும் என்று ஆச்சரியமாக கேட்கலாம். நல்ல புரிதல் இருந்தால் கண்டிப்பாக வசிக்கலாம் என்கிறார் அந்த பெண். லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர் மரியா பட்ஸ்கி. இவருக்கு பால் என்பவருடன் முறைப்படி திருமணமாகி, 9 மற்றும் 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. மரியாவிற்கு தற்போது 33 வயதாகிறது.
ஒருநாள் தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர் என்பவருக்கும் மரியாவுக்கும் காதல் ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்தினார் மரியா. என்னதான் காதலர் மீதான மோகத்தில் சென்றுவிட்டாலும் இதுநாள் வரை பெற்று வளர்த்த குழந்தை பாசம் மரியாவை வாட்டி எடுத்துள்ளது.
கணவரும் மிகவும் நல்லவர் என்பதும் இதில் முக்கிய அம்சம். குழந்தைகளும் மரியாவை காணாமல் அழவே, ஒரு கட்டத்தில் கணவரையும், குழந்தைகளையும் காண சென்று வந்துள்ளார் மரியா. அதற்கு பிறகு மூன்று பேரும் ஒருநாள் ஒன்றாக உட்கார்ந்து பேசியிருக்கின்றனர். இந்த சந்திப்பில் மரியாவின் காதலரும், கணவரும் நல்ல நண்பர்காளாக மாறிவிட்டனராம்.
இதன்பின்னர் மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என பேசவே, என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என பேசி முடிவு செய்தனராம். இதை குழந்தைகளும் ஏற்றுக்கொள்ளவே இப்போது ஓராண்டாக கணவர் பால் மற்றும் காதலர் பீட்டர் குழந்தைகளுடன் நான் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் மரியா.
இதுவரை எந்த பிரச்னையும் இல்லையாம். கண்போல பார்த்துக் கொள்கின்றனர் என் கணவரும் காதலரும் என் இரு குழந்தைகளை கண்போல பார்த்து கொள்கின்றனர். கூடவே என்னையும் அவர்கள் இருவரும் தரையில் கூட விடுவதில்லை. இதுபோன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வாய்க்காது என்று கூறுகிறார் மரியா.
படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதில்லை. மேலும் பீட்டர் இருக்கும்போது பால் வருவதில்லை. பால் இருக்கும் போது பீட்டர் வருவதில்லை. இது மற்றவர்களுக்க வினோதமாக தெரியலாம். ஆனால் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூகத்தையும், புரிதலையும் கொடுத்துள்ளது என்கிறார் மரியா. நிஜமாகவே வினோதமான வாழ்க்கைதான் இது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக