கட் (Cut) டெலீட் (Delete) ஆகிய இரண்டு கட்டளைகளும் ஒரே பணியைத் தானே மேற்கொள்கின்றன. இதில் வேறுபாடு உள்ளதா?
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை டெலீட் என்பது நீக்கப்படுதல்; கட் என்பது, ஒன்றின் இடத்தை மாற்றி அமைத்தல். இவை இரண்டும் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைக் கட்டளைகள்.
ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா, பைல், போல்டர் ஆகியவற்றின் மீது செயல்படுகையில், இரண்டும் வேறுபாட்டுடன் தான் செயல்படுகின்றன. எடுத்துக் காட்டு ஒன்று தருகிறேன். வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட் ஒன்றை இரண்டாவது பத்தியிலிருந்து நீக்கி, முதல் பத்தியில் அமைக்க வேண்டியுள்ளது. இதனை டெலீட் செய்தால், முதல் பத்தியில் மீண்டும் டைப் செய்திட வேண்டும். கட் செய்தால், முதல் பத்தியில் அமைக்க வேண்டிய இடத்தில் கர்சரை அமைத்து, பேஸ்ட் கட்டளை கொடுத்தால் போதும். இதே போல பைல் ஒன்றை டி ட்ரைவில் இருந்து சி ட்ரைவிற்கு மாற்ற வேண்டும் எனில், டி ட்ரைவில் பைலைத் தேர்ந்தெடுத்து, டெலீட் செய்திடாமல், கட் செய்திட வேண்டும். பின் சி ட்ரைவ் சென்று பேஸ்ட் செய்தால் போதும். பைல் சி ட்ரைவில் அமர்ந்துவிடும்.
இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். கட் கட்டளை கொடுக்கையில், அந்த டெக்ஸ்ட் அல்லது பைல் கிளிப் போர்டில் அமர்ந்து கொள்கிறது. பின்னர், பேஸ்ட் கட்டளை கொடுக்கையில் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது.
டெலீட் செய்கையில், அந்த பைல் ரீசைக்கிள் பின்னில் அமர்கிறது. அதனைத் தேர்ந்தெடுத்து ரெஸ்டோர் (“Restore”) கட்டளை கொடுத்தால், பைல் பழைய இடத்திற்குச் செல்கிறது. ரீசைக்கிள் பின்னில் உள்ள அனைத்து பைல்களையும் நீக்கக் கட்டளை கொடுத்தாலோ, அல்லது குறிப்பிட்ட அந்த பைலை நீக்கக் கட்டளை கொடுத்தாலோ, முற்றிலுமாக அந்த பைல் நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக