“எவனாவது இலங்கை பக்கம் போனீங்க… மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்” என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும், “இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால இலங்கை ட்ரிப்பை ஓகே பண்ணிட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்…’ என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து ‘பேக்கப்’ செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள்.
“நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு?” இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள்.
என்ன செய்தாராம் பிரபுதேவா?
தற்போது ‘ராமைய்யா வொஸ்தாவயா’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இவர். இதில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் வரும் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பிரபல நடிகையை தேடிக் கொண்டிருந்தவருக்கு கண்ணில் மாட்டினார் இலங்கையை சேர்ந்த நடிகை ஜாகுலின் பெர்ணான்டஸ்.
இந்த ஜாகுலின் இலங்கையில் மிஸ் ஸ்ரீலங்கா யூனிவர்ஸாக 2006-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கள நங்கை. அதன்பின் மாடலாக இருந்து சினிமா நடிகை ஆனவர்.
இவரை இந்திய சினிமாவுக்கு கொண்டு வந்தவர் பிரபுதேவா அல்ல.. 2009-ம் ஆண்டு வெளியான ‘அலாடின்’ ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
அமிதாப்பச்சன் நடித்த அந்தப் படத்தில், ஜஸ்மின் கேரக்டரில் நடித்தவர், சாட்சாத் இந்த சிங்கள நடிகைதான். அதற்காக, 2010-ம் ஆண்டு இந்திய சர்வதேச பிலிம் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. 2012-ம் ஆண்டில் ‘பாலிவூட்டின் ஸ்டைலிஷ் நடிகை’ விருதும் (உஜாலா ஏஷியாநெட் விருது) கிடைத்தது.
சிங்களம் தவிர, ஹிந்தி, உருது, அராபிக், ஸ்பானிஷ், பிரெஞ்ச் பேசக்கூடிய ஜாகுலீனை, ‘ராமைய்யா வொஸ்தாவயா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்து வந்திருக்கிறார் பிரபுதேவா! ‘ஜாது கி ஜாபி’ என்ற பாடலுக்கு ஆட்டம் போடவுள்ளார் ஜாகுலின்.
வந்த ரெண்டாம் நாளிலிருந்தே “பிரபுதேவா ஒரு ஜீனியஸ்” என்று பேட்டியளித்து வருகிறார் ஜாகுலின். அவரு ஜீனியஸ்சோ, போனிக்சோ, இந்த செய்தி கசிந்த நாளிலிருந்தே அவரது இமேஜை நார் நாராக கிழித்து ஓனிக்ஸ் தொட்டியில் வீசிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே.
தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் சென்னை ஏர்போர்ட்டுக்கு வர்றப்போ… இருக்கு கச்சேரி! அவரை ஆட வைத்தவரை, இவர்கள் ஆட வைத்து விடுவார்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக