ஆபிரிக்கா கண்டத்தின் கிழக்குப்புற நாடு கென்யா பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு எதிராக நடத்திய விடுதலைப் போர் பற்றிப் பார்ப்போம் மனித வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராச்சியமாக இடம்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராச்சியம் பொது மக்களை முட்கம்பி வேலி தடுப்பு முகாம்களுக்குள் சிறைக் கைதிகளாக அடைத்து வைக்கும் கொடூரத்தையும் அது உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தெற்கு ஆபிரிக்காவில் டச்சு குடியேறிகளுக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசு இரண்டு ஆயுதப் போர்களை நடத்தியது. அவை 1880 – 1881 காலப் பகுதியிலும் பிற்பாடு 1899 -1902 காலப் பகுதியிலும் நடைபெற்றன. இவை கூட்டாக போவர் போர்கள் (Boer Wars) என்று அழைக்கப்படுகின்றன.
இரண்டாவது போவர் போர் நடந்த காலத்தில் பொது மக்களை முட்கம்பி வேலி தடுப்பு முகாம்களுக்குள் நெருக்கமாக அடைத்து வைக்கும் கொடிய மனிதாபிமானமற்ற நடைமுறையைச் அது செயற்படுத்தியது. இந்தத் தடுப்பு முகாம்கள் “ கொன்சன்ரேஷன் காம்ப்ஸ்” (Concentration Camps) என்று வகைப்படுத்தப் படுகின்றன.
யூதர்களை அடைத்து வைத்த நாசி ஜேர்மன் அரசு பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைப் பின்பற்றியது. சோவியத் ஒன்றியம் அரசியல் எதிரிகளை அடைத்து வைப்பதற்கு முட்கம்பி வேலித் தடுப்பு முகாம்களைப் பயன்படுத்தியது. 1992 -1996 காலத்தில் பொஸ்னிய முஸ்லிம்களை அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து இனப்படுகொலை செய்வதற்கு சேர்பியப் படைகள் அதே முறையைப் பின்பற்றின.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக உலகின் முன்னணி நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களை அடைத்து வைப்பதற்கு முட்கம்பி வேலி முகாம்களை இலங்கை அரசு செட்டிக்குளத்தில் வல்லரசுகளைப் பின்பற்றி அமைத்தது.
பிரிட்டிஷ் சாம்ராச்சியம் கென்யா விடுதலைப் போர் காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பொது மக்களை மேற்கூறிய வகை முகாம்களுக்குள் அடைத்து வைத்தது. அது மாத்திரமல்ல அங்கு நடந்த சித்திரவதைகள் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்களாகும்.
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வேர்சேல்ஸ் உடன்படிக்கை (Versailles Treaty) கென்யாவை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு வழங்கியது. அதற்கு முன்பே 1900ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் கென்யாவில் தொடங்கி விட்டது. தலைநகர் நைரோபிக்கு வெளியே இருந்த மலைப் பிரதேசங்களை அவர்கள் தமது உடமை ஆக்கினார்கள்.
இந்தப் பகுதியின் பசுமையான விவசாயத்திற்கு உகந்த மண்ணில் வாழ்ந்த பூர்வ குடிகளான மாசாய் (Maasa) மற்றும் கிக்கூயூ (Kikuyu) வெள்ளையர்களால் வெளியேற்றப்பட்டனர். வெள்ளையர்கள் அமைத்த பெரும் தோட்டங்களுக்கு மலிவான கூலியாட்கள் தேவைப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட பூர்வ குடிமக்கள் கூலி வேலைக்குச் செல்ல மறுத்து விட்டனர். அவர்களை வேலைக்கு வரச் செய்வதற்காக ஆட்சியர்கள் “குடிசை வரியை” (Hut Taxes) அவர்கள் மீது சுமத்தினார்கள். இந்த வரியைச் செலுத்துவதற்காக அவர்கள் வெள்ளையர்களின் பண்ணைகளில் வேலை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கென்யாவில் வெள்ளையர்களின் குடியேற்றம் உச்சம் அடைந்த போது பூர்வ குடிகளின் மண் இழப்பும் உச்சம் அடைந்தது. கென்யா விடுதலைப் போர் கிக்கூயூ இனத்தவர்கள் தலைமையில் மண் மீட்புப் போராக ஆரம்பிக்கப்பட்டது.
வெள்ளைக் குடியேறிகளுக்கு எதிரான முதலாவது தேசிய இயக்கம் ஹரி துக்கு (Harry Thuku) என்பவரால் கிழக்கு ஆபிரிக்க அமைப்பு (East African Association) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பல ஆசிய இந்தியக் குடியேறிகள் இந்தக் கிக்கூய அமைப்பிற்கு ஆதரவு நல்கினர்.
ஹரி துக்கு 1922ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஏழு வருட நாடு கடத்தல் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நைரோபி பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டபோது வெளியே குழுமிய பொது மக்கள் மீது பொலிஸ் துவக்குச் சூடு நடத்தியது. இதில் 23 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஹரி துக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அத்தோடு அவர் மக்கள் செல்வாக்கை இழந்தார். ஆனால் நவீன கென்யாவின் பிதாமகர் என்று வர்ணிக்கப்படும் ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta) விடுதலை இயக்கத்தின் தலைமையை ஏற்றார்.
இவர் பிறப்பால் கிக்கூயூ இனத்தவர்,அவருக்கு ஆங்கிலக் கல்வியை கிறிஸ்தவ மிசனறிகள் புகட்டினார்கள். அவர் தலைநகர் நைரோபிக்கு 1921ம் ஆண்டு வந்தார். 1928ல் அவர் விடுதலை இயக்கத்தின் பத்திரிகை ஆசிரியராகப் பதவியேற்றார். 1929, 1931ம் ஆண்டுகளில் அவர் இங்கிலாந்து சென்று இழந்த மண்ணை மீட்பதற்கு முயற்சித்தார்.
ஜோமோ கென்யாட்டா இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பதினைந்து வருடங்கள் செலவிட்டார். அப்போது அவர் இலன்டன் பொருளாதாரக் கல்லூரி உட்படப் (London School of Economics) பல்வேறு கல்வி நிலையங்களில் படித்தார்.
கென்யா விடுதலை இயக்கம் தொடர்பான பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதோடு 1938ம் ஆண்டு கென்யா மலையைப் பார்த்தபடி (Facing Mount Kenya) என்ற முக்கியமான நூலை எழுதி வெளியிட்டார். இரண்டாம் உலகப் போர் 1945ல் முடிவுற்ற போது அவர் இங்கிலாந்தில் ஐந்தாம் அனைத்து ஆபிரிக்கக் காங்கிரசைப் பிற ஆபிரிக்கத் தலைவர்களோடு இணைந்து ஒழுங்கு செய்தார்.
ஏற்கனவே அமெரிக்கக் கறுப்பரான டூ போய்ஸ் (Du Bois) 1919 -1927ம் ஆண்டுகளுக்கு இடையில் அனைத்துலகக் கறுப்பர்களை ஒன்றிணைத்து அமெரிக்காவில் நான்கு காங்கிரஸ் மாநாடுகளை நடத்தியுள்ளனர்.
செப்ரம்பர் 1946ல் ஜோமோ கென்யாட்டா நாடு திரும்பினார். யூன் 1947ல் அவர் கேஏயூ (KAU) எனப்படும் நாடு தழுவிய கென்யா ஆபிரிக்க யூனியன் (Kenya African Union) என்ற அரசியல் அமைப்பின் முதலாவது தலைவரானார். சுயாட்சி பெறுவதற்கு அது எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
அப்போது கிக்கூயூ மக்கள் மத்தியில் மவ் மவ் என்ற பெயரில் (Mau Mau) ஒரு போரட்ட இயக்கம் ஆரம்பமாகியது. இது வெள்ளையர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியது. ஆபிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பிற ஆபிரிக்க இனங்களுடன் தொடர்புகளை அது ஏற்படுத்தியது.
இரண்டாம் உலகப் போரின் போது கறுப்பு இனங்கள் இராணுவத்தில் இணைந்து போரிட்ட காலத்தில் வெள்ளையர்களின் வீரம் அசாத்தியமானதல்ல என்று அவர்கள் உணர்ந்தார்கள்;. இந்த உணர்வு வெள்ளையர்கள் மீதான தாக்குதல்களுக்கு உரமூட்டியது.
மவ் மவ் இயக்கம் தன்னை கென்யா நிலத்திற்கும் விடுதலைக்குமான இராணுவம் (Kenya Land and Freedom Army) என்று அழைத்தது. ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கேஏயூ பாரிய மக்கள் ஆதரவுடன் தேசிய அரசியல் இயக்கமாகச் செயற்பட்டது.
சிறுபான்மை எண்ணிக்கையிலான வெள்ளைக் குடியேறிகள் தமது தலைமையில் தெற்கு ஆபிரிக்காப் பாணியில் சுயாட்சி வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிற்கு நெருக்குதல் கொடுத்தனர். எல்லோருக்கும் சாதகமான பதிலளித்தபடி பிரிட்டிஷ் அரசு தனது போக்கிற்குச் செயற்பட்டது.
மவ் மவ் இயக்கப் போராளிகளின் தாக்குதல்களில் 32 வெள்ளையர்கள் மாத்திரம் விடுதலைப் போர் நடந்த எட்டு வருடகாலத்தில் கொல்லப்பட்டனர். ஆனால் பிரிட்டிஷ் இராணுவமும் விமானப் படையும் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும்.
பிரிட்டிஷ் அரசு அரச பயங்கரவாதத்தைத் தாராளமாகப் பயன்படுத்தியது. ஹாவார்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் கரோலின் எல்கின்ஸ் (Caroline Elkins) எழுதிய நூலில் (Imperial Reckoning: The untold history of Britain’s Gulag in Kenya) அவை விவரிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் ஆட்சியர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களை சுகாதார வசதிகளற்ற உணவுத் தட்டுப்பாடு நிலவிய முட்கம்பி தடுப்பு முகாம்களில் அடைத்தனர். பெண்கள் மீது பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். சித்திரவதை பரவலாக நடத்தப்பட்டது.
ஆண்களுடைய விந்து உற்பத்தி செய்யும் விதையை எருதுகளுக்குக் காயடிக்கும் கருவியால் முகாம்களில் வைத்து அகற்றினார்கள். (Castration). பாதிக்கப்பட்ட ஆண்கள் பேடிகளாகினா. சவுக்கால் அடித்தல், காயடித்தல் போன்றவற்றை டெறன்ஸ் கவகன் (Terence Gavaghan) என்ற வெள்ளையன் மேற்பார்வை செய்தான். 1963ம் ஆண்டு கென்யா சுதந்திரம் பெற்ற பிறகு இந்த அதிகாரி நாடுகடத்தப் பட்டான்.
1952ல் தொடங்கிய மவ் மவ் போராட்டம் 1954ம் ஆண்டில் வீரியம் குறைந்து காணப்பட்டது. மவ் மவ் இயக்கத்தோடு எதுவிதத் தொடர்பும் இல்லாத ஜோமோ கென்யாட்டா மீது பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மவ் மவ் இயக்கத்தின் தலைவர் டெடன் கிமதி (Dedan Kimathi) காட்டிக் கொடுக்கப்பட்டு 21 ஒக்ரோபர் 1956ல் கைது செய்யப்பட்டார். பக்கச்சார்பான வெள்ளை நீதிபதிகள் அவருக்குக் தூக்குத் தண்டனை விதித்தனர். 18 பெப்பிரவரி 1957ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.
1955ம் ஆண்டளவில் பிரிட்டிஷ் அரசு மவ் மவ் இயக்கத்தை அடக்கும் நிலையில் இருந்தாலும் அது போரைத் தொடர விரும்பியது. முன்னாள் மவ் மவ் இயக்கப் போராளிகளும் வெள்ளையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கறுப்பர்களும் மவ் மவ் இயக்கத்தைத் தோற்கடிக்க உதவினார்கள்.
டேடான் கிமதியின் கைதும் மரணமும் மவ் மவ் இயக்கத்திற்கு மரண அடி கொடுத்தது. என்றாலும் அவர்களுடைய போரட்டம் பிரிட்டிஷ் அரசிற்கு ஒரு முக்கிய பாடத்தை உணர்த்தியது. பெரும் பொருட் செலவில் பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் தான் விடுதலைப் போராட்டங்களை அடக்க முடியும்.
கென்யாவுக்கு ஆகஸ்து 1961ல் தன்னாட்சி வழங்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜோமோ கென்யாட்டா கானூ (Kanu) எனப்படும் கென்யா ஆபிரிக்கன் தேசிய ஒன்றியத்தின் (Kenya African National Union) தலைமையை ஏற்றார். கென்யா 12 டிசம்பர் 1963ல் பூரண சுதந்திரம் பெற்றது. டிசம்பர் 1964ல் அது தன்னைக் குடியரசாகப் பிரகடனப் படுத்தியது.
எழுபது வருட காலம் தொடர்ச்சியாக நடந்த சுதந்திரப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அதன் பாதிப்புக்கள் இன்னும் மறையவில்லை. பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பெற்றாரை இழந்த அநாதைகள் ஆகினர். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புக்களை இழந்து இன்றும் உள்நாட்டு அகதிகளாகியுள்ளனர்.
வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அவர்களுக்குச் சொந்தமான பெரும் பண்ணைகளை நாட்டின் தலைவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதில் ஜோமோ கென்யாட்டாவின் வாரிசுகளும் அடங்குவார்கள். அந்த மண்ணுக்குரிய பூர்வ குடிகளுக்கு இன்றுவரை நிலம் பகிர்ந்தளிக்கப் படவில்லை.
பிரிட்டிஷ் அரசின் முட்கம்பி தடுப்பு முகாம்களில் சித்திரவதை அனுபவித்தவர்களும் ஆண்மையை இழந்தவர்களும் வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சிக்குச் சான்று பகருகின்றனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக