கைதடி சிறுவர் இல்ல சிறார்கள் வாக்குமூலம்
பொறுப்பாளர் கைது; விளக்கமறியல்
ஸாதிக் ஷிஹான்
யாழ்ப்பாணம், கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதன் பொறுப்பாளர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 16 சிறுவர்களில் 12 பேர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து சிறுவர் இல்லத்தினரால் சாவகச்சேரி பொலிஸாரிடம் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி முறைப்பாட்டை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து காணாமல் போனதாக கூறப்பட்ட 11 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து 2 சிறுவர்களும், யாழ். நகரிலிருந்து 7 பேரும், யாழ்ப்பாணத்தில் ஏனைய பிரதேசங்களிலிருந்து 2 சிறுவர்களும் என்ற அடிப்படையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையை அடுத்து கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸாரினால் யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை அடுத்தே தாங்கள் சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறியதாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பொலி ஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
சிறுவர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலே சிறுவர் இல்ல பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக