திங்கள், 15 ஏப்ரல், 2013

உலகில் மோசடியில் முன்னணியில் இருக்கும் ஈழத்தமிழர்கள்

மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றி அந்தந்த நாட்டு குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஒரு ஆய்வை நடத்தினால் நல்ல உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என தமிழர்களை பற்றி அவர்கள் சொல்வார்கள் என உங்களில் பலர் எண்ணலாம்.

ஆனால் ஒரு கணிசமான தொகையினர் செய்யும் மோசடிகளால் தமிழர்கள் பற்றிய அபிப்பிராயம் வெளிநாட்டவர்கள் மத்தியில் நல்ல நிலையில் இல்லை என்பதுதான் உண்மை.

சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் தமிழர்கள் பற்றி செய்த பிரசாரம், மேற்குலக நாடுகளில் இருக்கும் சில தமிழர்கள் செய்யும் மோசடி வேலைகளால் தமிழர்களை பற்றி அந்தந்த நாட்டு குடிமக்கள் மிக மோசமான எண்ணத்தையே கொண்டிருக்கின்றனர்.

கூகிள் தேடு தளத்திற்கு சென்று Credit Cards forgeryஎன தேடினால் அங்கு கடனட்டை மோசடி பற்றிய செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர்கள் இலங்கை தமிழர்கள் தான்.

ஆரம்பகாலத்தில் தூள் கடத்தல் என்ற கிரோயின் போன்ற போதைப்பொருள் கடத்தலில் இலங்கை தமிழர்களே முன்னணியில் இருந்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயன்படுத்தியவர்களும் உண்டு. இதுவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மேற்குலக நாடுகள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு ஒரு காரணமாகும். இப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது குறைந்துள்ள போதிலும் கடனட்டை மோசடி அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான கடனட்டைகள் பற்றிய தரவுகள் லண்டன், சுவிஸ், கனடா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளிலேயே திருடப்படுகிறது.

முக்கியமாக தமிழர்கள் நடத்தும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், தனியார் தபாலகங்கள், ஆகியவற்றிலேயே இந்த கடனட்டை தரவு திருடும் வேலைகள் நடைபெறுகின்றன.
உதாரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடனட்டையை பாவிக்கும் போது அதன் தரவுகளை பதிவு செய்யக் கூடிய ஒளிப்பதிவு கருவிகளை வைத்து விடுகின்றனர். இதில் பதிவு செய்யும் தரவுகளை கொண்டு புதிய கடனட்டைகளை தயாரித்து இந்த மோசடிகளை செய்து வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் அல்லது பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களால் இலாபம் வருகிறதோ இல்லையோ கடனட்டை தரவுகளை திருடுவதால் அவர்கள் கொள்ளை இலாபம் அடைகின்றனர். கணிசமான கடனட்டைகளை தரவுகளை திருடிய பின் சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடிவிட்டு சென்ற சம்பவங்களும் உண்டு.

இந்த கடனட்டை மோசடியில் பிடிபடும் பலரும் தங்களை விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்றே அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். இதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளில் கெட்டபெயரையே சம்பாதித்து கொடுகின்றனர்.

இலண்டன், ஒஸ்ரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திருடப்படும் தரவுகளை கொண்டு தயாரிக்கப்படும் கடனட்டைகளை ஆசிய நாடுகளுக்கு கொண்டு சென்று அங்கேயே பணத்தை பெற்று வருகின்றனர். தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இந்த கடனட்டைகளை எடுத்து சென்று அங்கு ஏரிஎம் வங்கி இயந்திரங்களிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

அண்மையில் தாய்லாந்தில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட ஆறு பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இவர்களிடமிருந்து சுமார் 160க்கும் மேற்பட்ட கடனட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 10மில்லியன் தாய்லாந்து பணத்தை வங்கி ஏ.ரி.எம். இயந்திரத்திலிருந்து பெற்றிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக தாய்லாந்து சைபர் கிறைம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கொமர்சியல் வங்கி செய்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது 43 வயதுடைய எஸ்.சசீலன் என்ற இலங்கையர் முதலில் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த சுதர்சனன் நடராசா என்பவரும் மலேசியாவை சேர்ந்த தசிகுமார் அந்தோனிச்சாமி, ஈஸ்வரன் குமார், சோதிசங்கர் தியாகு, எம்.துரைசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடா, லண்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் கடனட்டைகளையே மோசடியாக பிரதி செய்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பாங்கொக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று அண்மையில் சிங்கப்பூரிலும் கடனட்டை மோசடியில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் லண்டன் குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் என சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேபோன்று கனடாவில் கடனட்டை மோசடியில் இதுவரை 61 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ரொரொன்ரோ, மலேசியா, ஒஸ்ரேலியா, துனிசியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏரிஎம் இயந்திரங்களிலிருந்து 100மில்லியன் டொலர்களை பெற்று மோசடி செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஒஸ்ரேலியா விக்டோரியா மாநிலத்தில் மூன்று தமிழர்கள் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1500 கடனட்டைகள் மீட்கப்பட்டிருந்தது.

கரன் நடா, ரமேஷ் ரத்தினசிங்கம், உதயகுமார் விவேகானந்தன் ஆகிய மூவரும் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது இவர்கள் ஒஸ்ரேலிய சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் ஒருவர் சொன்ன செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சுவிஸில் தான் ஒருவரை சந்தித்ததாகவும், அவர் தன்னை விடுதலைப்புலி உறுப்பினர் என அறிமுகப்படுத்திக் கொண்டார் என்றும் அவரிடம் பல மோசடியான கடனட்டைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தங்களை விடுதலைப்புலிகள் என்று சொல்லிக்கொண்டு மோசடி வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒஸ்ரேலியா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடனட்டை மோசடி போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டிருப்பவர்களில் கணிசமான தொகையினர் இலங்கை தமிழர் என்பது கசப்பான உண்மையாகும்.
திரைகடல் ஓடி திரவியம் தேடினார்கள் என ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை இருந்தது உண்மைதான். ஆனால் இன்று திரைகடல் ஓடி உலகத்தில் உள்ள அத்தனை மோசடி வேலைகளையும் செய்கிறார்கள் என்ற அவப்பெயரே உலக நாடுகளில் நிலவி வருகிறது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக உலக நாடுகள் தடை செய்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

- இரா.துரைரத்தினம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல