அண்ணன் தம்பியிடையே சாதாரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததோடு, தம்பியின் உயிரையும் பறித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் பருத்தித்துறைப் பகுதியில் கடந்த 10ம் திகதி இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறையைச் சேர்ந்த ரா.விஜேந்திரன் வயது 21 என்ற நபரே உயிரிழந்தவராவார்.
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலாப்பாக மாறியுள்ளது. இதன்போது அண்ணாவை தம்பி இரும்புக் கம்பியால் கடுமையாகத் தாக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அண்ணாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நேரம் தம்பி பொலிஸாருக்கு அஞ்சி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக