தாய்லாந்தில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் கைது ?
தாய்லாந்தில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட ஆறு பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 100கடனட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 10மில்லியன் தாய்லாந்து பணத்தை வங்கி ஏ.ரி.எம். இயந்திரத்திலிருந்து பெற்றிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக தாய்லாந்து சைபர் கிறைம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கொமர்சியல் வங்கி செய்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது 43 வயதுடைய எஸ்.சசீலன் என்ற இலங்கையர் முதலில் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த சுதர்சனன் நடராசா என்பவரும் மலேசியாவை சேர்ந்த தசிகுமார் அந்தோனிச்சாமி, ஈஸ்வரன் குமார், சோதிசங்கர் தியாகு, எம்.துரைசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா, லண்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் கடனட்டைகளையே மோசடியாக பிரதி செய்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பாங்கொக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக