இலங்கையில் மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை பாதுகாப்பு படையில் இணைக்கும் திட்டம் செல்படுத்தப்பட உள்ள நிலையில் அந்தப் படையில் இணைய வேண்டாம் என இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டு விடுதலைப் புலிகள் இயக்க பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன் அம்மான் படைப்பிரிவு செய்தித் தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாஸ்டர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வன்னியில் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதில் இணைந்து கொள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விண்ணப்பித்துள்ளதாக அறிந்தோம்.
இது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரானது. விதிமுறைகளை மீறி விண்ணப்பம் செய்பவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசியத் தலைவர் அவர்களின் தலைமையில் வீரப் படையணி இலங்கை மீது படையெடுத்து, தமிழீழத்தை அடைந்தவுடன், அங்கு வேலை வாய்ப்புகளில் முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதுவரை முன்னாள் போராளிகள் அவசரப்பட்டு எதிரியின் சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்.
இந்த எச்சரிக்கையை மீறி, இலங்கை படைகளில் இணையும், மற்றும் விண்ணப்பிக்கும் முன்னாள் போராளிகள், துரோகிகள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என நெடியவன் அம்மான் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரும், வீரப் படையணியும் புறப்பட்டு வரும்வரை முன்னாள் போராளிகள் வாழ்க்கைச் செலவுக்கு இந்த அம்மானும், அவரது மாஸ்டரும் ஏதாவது ஏற்பாடு செய்வார்களா? அதற்கு பதில் சொல்ல மாட்டார்களே!
விறுவிறுப்பு

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக