முகாம் மாறிய தயா மாஸ்டர்
ஈழப் போரின் தோல்வி, பல அவலமான தருணங்களை உருவாக்கி நம்மை நிலைகுலையச் செய்கிறது. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர், இப்போது ராஜபக்ஷேவின் கட்சி சார்பாகவே தேர்தலில் போட்டியிடுவதை என்னவென்று சொல்வது? வேலாயுதம் தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட தயா மாஸ்டர், ஆங்கில ஆசிரியர். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக்கொண்டவர். இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், 2009 ஏப்ரல் 22-ம் தேதி தயா மாஸ்டரும், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜார்ஜ் என்பவரும் ராணுவத்திடம் சரணடைந்தனர்.
பிறகு, யாழ்ப்பாணத்தில் இருந்து செயல்படும் 'டான்’ டி.வி-யில் வேலைக்குச் சேர்ந்தார். டான் டி.வி-யின் பொறுப்பாளராக இப்போதும் பணிபுரிகிறார். வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடமாகாண முதல்வர் பதவிக்குத் தயா மாஸ்டர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. பிள்ளையான் முதல் கருணா வரை எத்தனையோ பேர், புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி அரச ஆதரவாளர்களாக மாறியிருக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் ராஜபக்ஷேவின் கட்சியிலேயே சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது இல்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரகாந்தன் கூட, 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சி சார்பாகவே போட்டியிட்டார். தயா மாஸ்டர்தான் முதல் முறையாக இவ்வாறு போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தயா மாஸ்டர், ''முன்னாள் விடுதலைப் புலிகளின் விடுதலைக்கும், நல்வாழ்வுக்குமே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆளும் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கும் இதுவே காரணம். ஏற்கெனவே இங்குள்ள தமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு சரிவர உதவிகள் செய்யவில்லை'' என்று விளக்கம்(!) அளித்துள்ளார்.
பதவி எப்படி எல்லாம் பேசவைக்கிறது!
- பாரதி தம்பி
வாசகர் கருத்து..... இதில் துரோகம் எதுவுமில்லை. உலக தமிழர்களின் கேளிக்கைக்காக அவர்களிடம் உண்டியல் குலுக்கி அந்த பணத்தை கொண்டு ஈழ தமிழர்களை கொடும் இன்னலுக்கு ஆளாக்கிய வேலை தான் பிரபாகரன் இது வரை செய்து கொடிருந்து, பின்பு தானும் மாண்டான். இலங்கை அரசோடு இணைந்து தான் தமிழர்களின் நிலையை உயர்த்த முடியும் என்ற உண்மை இலங்கையிலுள்ள தமிழ் தலைவர்களுக்கு நன்றாக தெரியும். நாம் நம் வேலையை பார்ப்பது தான் அவர்களுக்கு செய்கின்ற மிக பெரிய உபகாரம்.
•Josex
அப்படியானால், இவரைப் போன்றோரெல்லாம் அன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எந்தளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருந்திருப்பார்கள்? கழுத்தில் சயனைடு குப்பியைத் தாங்கியிருந்தவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தது ஏன்? ஆக, இவர்கள் உசுப்பிவிட்டு போரிலும், தற்கொலைப்படை அணிகளாகவும் உயிரிழந்த அப்பாவிகள் புத்தி கெட்டவர்களா? அட கயவர்களே, மானங்கெட்டு பிழைப்பதைவிட மரணத்தைத் தழுவலே மேல்!
•Srinivasan
(விகடன்)

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக