பெங்களூரில் பெற்றோர்களே தங்களது மகளை 5 ஆண்டுகளாக தனி அறையில் சிறை வைத்துள்ள கொடுமை நடந்தேறியுள்ளது. ஹேமாவதி என்ற அந்த 35 வயது பெண்ணை போலீசார் மீட்டனர்.
காதலை கைவிட மறுத்ததால் பெற்ற பெண்ணை நிர்வாணமாக சிறை வைத்து கொடுமை செய்துள்ளனர். போலீஸ் சித்தரவதை கூட மேலும் என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது.
அந்தப் பெண் தப்பி காதலனுடன் சென்று விடக்கூடாது என்பதற்காக உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அந்தப் பெண் தனி அறையில் சிறை வைத்துள்ளார்கள்.
ஐந்து ஆண்டு கொடுமையைப் பொறுக்க முடியாமல் தன்னைக் காப்பாற்றும்படி நேற்று இரவு முழுவதும் கூச்சல் போட்டு உதவிக்கு அழைத்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹேமாவதியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஹேமாவதியின் நிலையைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லை.
காதலைக் கைவிட மறுத்ததால் அவரை சிறை வைத்ததாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுத்தனர். “எங்கள் மகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோய் ஏற்பட்டது. பின்னர் மனநோய் பாதிக்கப்பட்டது. அதனால்தான் அடைத்து வைத்திருந்தோம்,” என்றனர்.
அட கொடுமையே!
- படம்: IBNlive

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக