செவ்வாய், 11 ஜூன், 2013

பெண்கள் சீரியல் பார்ப்பது ஏன்?.

பெண்கள் சீரியல் பார்ப்பது ஏன் என்ற கேள்வி எனக்கு நிறைய நாட்களாக உண்டு. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு , நான் கண்ட உண்மை – இது மரபுத் தொடர்ச்சி. என்ன ? ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் . காலம் காலமாக பெண்களை ஆட்கொண்டிருக்கும் இந்த நோயின் பீடிப்பு தொலைக்காட்சி தொடரின் வாயிலாக உச்சத்தை அடைந்திருக்கிறது என்பதே உண்மை.

எனக்குத் தெரிந்த சரித்திரமும் அனுபவமும் எனக்கு இந்த பார்வையைத் தருகின்றன. மிகவும் பண்டைய காலத்தில் பெண்கள் ஓரளவு சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் . அதியமான் தன் நண்பன் என்று ஒரு ஆணை தன் நண்பன் என்று சொல்லிக் கொள்கிற சுதந்திரமும் முற்போக்கு சிந்தனையும் இருந்துருக்கிறது . இடையில் என்ன நேர்ந்ததோ , கல்வி என்பதே கல்யாண சந்தையில் முன்னணியில் நிற்க வேண்டும் என்ற நிர்பந்தத்துக்காக என்று ஆகிவிட்டது.

எத்தனை BE களும் MBA களும் மைக்ரோ அவனில் சாம்பார் வைத்துக்கொண்டு , கம்ப்யூட்டரில் கோலம் போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் ? இன்று லட்ச லட்சமாக சம்பாதிக்கும் ஆண்களை விட திறமையான பெண்கள் sun டிவியில் புதைந்து போய் கிடக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம் . எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல் வருகிறது ஆனால் sun டிவியின் பங்கு இன்றைய இல்லத்தரசிகளின் வாழ்வில் மிக அதிகம்.

சரி, இவர்கள் ஏன் இப்படி விழுந்தடித்துக்கொண்டு சீரியல் பார்க்கிறார்கள்? It gives them a commitment in life . ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது , அன்றைய நாளை எதிர்நோக்கி காத்திருக்க ஒரு காரணத்தை உண்டாக்குகிறது. 10 மணிக்கு சீரியல் என்று திட்டம் போட்டு சமையலை முடிப்பது ஒரு நிறைவைத் தருகிறது. 2:30 மணிக்கு news போடும்போது சாப்பிடுவது அலுவலகத்தில் lunch break ல் சாப்பிடும் ஒரு உணர்வைத் தருகிறது. நான் வெட்டியாக இல்லை எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்ற மனோபாவம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

அன்றாட பிரச்சனைகளை மறக்க ஒரு வடிகாலாக இருக்கின்றது. தோற்றுப் போகும் கதாபாத்திரத்தை தன் மாமியாராகவோ நாத்தனாராகவோ இல்லை பக்கத்துக்கு வீட்டு அழகிய பெண்ணாகவோ நினைத்துக்கொண்டு , ஜெயிக்கும் கதாபாத்திரம் தன்னுடைய பிரதிபலிப்பு என்று நினைக்கிறார்கள்.

பொதுவாக பெண்கள் அரசியல் , பொருளாதாரம் பற்றி பேசுவதில்லை ,வேறு எந்த ஒரு தலைப்பும் பெரும்பான்மையான பெண்களை கவருவதில்லை . எனவே , உறவினர் , தோழியர் சந்திப்பில் பேச இது ஒரு பொதுத் தலைப்பு ஆகி விடுகின்றது அலுவலக இடைவேளையில் கூட சீரியல் பற்றி பேசும் பெண்களிடம் வேறு ஒரு சமூக அக்கறை கொண்ட தலைப்பை பேசும்பொழுது , என்னை ஓரங்கட்டிவிட்டு அவர்கள் சரவணன் மீனாட்சியில் மூழ்கிப் போகிறார்கள்.

நாமெல்லாம் அன்றைய தொடர்கதைகள் படித்து வளர்ந்தவர்கள், அடுத்து என்ன என்ற ஆர்வம் பெண்களுக்கு பிடித்திருக்கிறது .பிறர் வாழ்வில் என்ன நடக்கிறது என்ற ஆர்வமும் இயல்பாகவே அவர்களை ஆட்கொள்கிறது, சீரியல் கதாபத்திரங்களை நிஜம் போலவே நம்புகிறார்கள், அவர்களுக்காக அழுகிறார்கள்.

சரி, சீரியல் தானே பார்த்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடக்கூடிய பிரச்சனை அல்ல இது. சீரியல் பார்க்கும்பொழுது பால் கேட்டு அழுத குழந்தையை அடித்து விட்டு டிவியின் முன் படுத்துக்கொண்டே குழந்தைக்கு பால் கொடுத்த பக்கத்து வீட்டு அக்காவைப் பார்த்து நொந்து போனேன்.

தான் டிவி பார்ப்பதால் தன் குழந்தை என்னவெல்லாம் தொலைக்கிறது என்று இந்த மிடில் கிளாஸ் அம்மாக்கள் உணர்வதில்லை. 6 மாத குழந்தை ஹாலில் கிடக்கிறது , நாள் முழுதும் சீரியல் , கேட்க சகிக்காத வசனங்கள் , எதிர்மறை எண்ணங்கள் கொண்ட காட்சி அமைப்பு , இதைப் பார்த்தே அந்த குழந்தை வளர்கிறது . இதில் ‘ என்ன சமத்தான குழந்தை? என்ற வீணாய்ப்போன பாராட்டு வேறு.

அப்ப நாங்க என்னதான் பண்றது ? என்று அரற்றும் பெண்களே , நேரம் போக்கத் தெரியாமல் , வாழ்கையை போக்கிக் கொள்ளாதீர்கள். ஆயிரம் உண்டு அலுவல் , உங்கள் நேரத்தையும் பயனுள்ளதாக்கி , சமூகத்திற்கும் பயன்படுமாறு, வருமானம் தரக்கூடிய சிறு தொழில்கள் எத்தனை செய்யலாம் ? நீங்கள் பிறருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாம். சீரியல் சிறையை விட்டு வெளியே வாருங்கள்.

சீரியல் தயாரிப்போரின் கவனத்திற்கு – இது உங்கள் பிழைப்பில் மண் போட அல்ல, இந்த ரசனை மாறினால் , தரமான படைப்புகளை கொடுக்க நீங்கள் தயார்தான் என்று எல்லோருக்கும் தெரியும் , இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று உங்கள் சிந்தனை சிறகுகளை வெட்டி விட்ட சோக கதையும் தெரியும்.

தரமான சீரியல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன . வாழ்வின் அடிப்படை உண்மைகளை எளிதாக்கி தரும் சீரியல்களும் உண்டு என்பது மறுப்பதற்கல்ல.

எதையோ , யாருக்காகவோ என்று இல்லாமல் , இதுதான் இந்த காரணத்துக்காகத்தான் என்று முயன்றால் அது நிச்சயம் இதை விட பெரிய வெற்றி பெறும்.பெண்ணே , நீ படித்தது உன்னை கல்யாண சந்தையில் ஏற்றி வைக்க மட்டும் இல்லை . இல்லறமும் நல்லறமாகுக. உன் திறமையும் உயர்ந்தோங்குக. இந்த மாய உலகை விட்டு வெளியில் வா, சிறகு விரித்துப் பற …பாரதிதாசன் சொன்னது போல, ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனோடு , ஒரு பெண் கல்வி கற்றால் அது அந்த குடும்பமே கற்றது போல, உன் அறிவை கூர்படுத்து , உன் சுயம் எங்கே என்று தேடு , உன் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!


by ஸ்வீட் சுபா !
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல