முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள கேப்பாப்புலவு மாதிரி கிராமத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பரிவாரங்களுடன் விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார்.
இங்கு புதிதாக கட்டப்பட்டு உள்ள ஆரம்ப பாடசாலையை நேரில் பார்வையிட்டார். பாடசாலையை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கினார். மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கினார். நாட்டுக்கு பயன்படுகின்ற நற்பிரஜைகளாக வளர வேண்டும் என்று அறிவுரை கூறினார். அத்துடன் 165 குடும்பங்கள் கொண்ட கிராமத்துக்கு சம்பிரதாயபூர்வமாக மின்சாரம் வழங்கினார்.
கோப்பாப்புலவு மாதிரி கிராமத்துக்கான வீடமைப்புத் திட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டு உள்ள 10 வீடுகளின் திறப்புகளை பயனாளிகளிடம் கையளித்தார். அத்துடன் இம்மாதிரி கிராம மக்களுக்கு உலர் நிவாரணம் வழங்கினார்.
இராணுவத்தால் இம்மக்களுக்கு கட்டப்பட்டு உள்ள வீடுகளில் ஒன்றுக்குள் ஜனாதிபதி உட்பிரவேசித்தார். வீட்டுக்காரர்கள் ஜனாதிபதியை முக மலர்வோடு முகமன் கூறி வரவேற்று உபசரித்தனர். வீட்டின் உட்கட்டமைப்பை சுற்றி பார்வையிட்டார்.

Thainaadu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக