பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற ரி. ஆர். ரி தமிழ் வானொலி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுரேஸ் பிறேமச்சந்திரன் எம். பியின் ஆசியுடன் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்து வந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாயகத்தில் உள்ள உறவுகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்தல் என்கிற போர்வையில் இந்நிதி சேகரிக்கப்படுகின்றது. ஆனால் உத்தேச பயனாளிகளை இந்நிதி சென்றடைவதில்லை. இந்நிதிக்கு என்ன நடக்கின்றது? என்கிற உண்மை புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும்பாலும் தெரிய வருவதும் இல்லை.
ஜேர்மனை வாழ்விடமாக கொண்டு உள்ள இ. சிறிகுமரன் என்பவர் ஊன்றுகோல் என்கிற இணைய தளத்தின் ஊடாக இவ்வாறான மோசடிகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
வேலணையில் உள்ள பாலச்சந்திரன் என்கிற உறவின் பெயரால் சுரேஸ் பிறேமச்சந்திரன் அன் ரி. ஆர். ரி வானொலி கம்பனி புலம்பெயர் தமிழர்களிடம் நடத்தி உள்ள இரண்டு இலட்சம் ரூபாய்க்கு நிதி மோசடி இவரின் தனிப்ப்ட்ட பகீரத முயற்சி காரணமாக தற்போது அம்பலத்துக்கு வந்து உள்ளது.
பாலச்சந்திரன் போரால் பாதிக்கப்பட்டவர். இடுப்புக்கு கீழ் இவருக்கு இயங்காது. சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றார்.
ரி. ஆர். ரி வானொலியில் கடந்த வருடம் அறிவிப்புக்கள் செய்து இவருக்கு கோழிப் பண்ணை அமைக்க என்று ஒன்றரை இலட்சம் ரூபாயையும், இவரது மருத்துவ செலவுக்கு என்று 72 ஆயிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டனர்.
சுரேஸ் பிறேமச்சந்திரன் எம். பியின் மேற்பார்வையில் எம். பியின் உதவியாளர் மூலம் கோழிப் பண்ணை அமைத்து கொடுத்து உள்ளனர் என்றும் இப்போது பாலச்சந்திரனின் குடும்பம் மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றது என்றும் பின்னர் வானொலியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நடந்து இருப்பது வேறு. இந்நிதியை வானொலி நிர்வாகனத்தினரும், எம். பிமாரும் பகிர்ந்து கொண்டார்கள் என்பதே உண்மை. பாலச்சந்திரனுக்கு கோழிக் கூடு அல்ல ஒரு கோழிக் குஞ்சுகூட வழங்கப்பட்டு இருக்கவில்லை.
விடயங்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தவராக இருந்த சிறிகுமரன் சம்பந்தப்பட்ட தகவலை திரட்டி கொண்டு தாயகம் வந்து இருக்கின்றார்.
சுரேஸ் பிறேமச்சந்திரன் எம். பியுடன் தொடர்பு கொண்டு நிதிக்கு என்ன நடந்தது? என கேட்டு இருக்கின்றார். வீணாக தேவை இல்லாத விடயங்களில் மூக்கு நுழைக்க வேண்டாம் என்று இறுதியில் மண்டையன் குழு பாணியில் எச்சரித்து இருக்கின்றார் சுரேஸ்.
இருப்பினும் எதற்கும் அஞ்சாமல், சளைக்காமல் பாலச்சந்திரனின் வீட்டை கண்டறிந்து, நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார் சிறிகுமரன். சேர்க்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய ரூபாய்கூட பாலச்சந்திரனை வந்தடைந்து இருக்கவில்லை என்பதை கண்டு கொண்டார்.
பாலச்சந்திரனின் பெயரால் மோசடி நடத்தப்பட்டு இருப்பது குறித்து அறிந்து கொண்ட பாலச்சந்திரனும் பயங்கர கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
எனவே இவ்வாறான மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும், நம்பி ஏமாற கூடாது என இருவரும் பகிரங்க வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
தாய்நாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக